அம்பாறையில் நெல்லினை கொள்வனவு செய்வதற்கான விசேட திட்டம்
(எம்.பைசல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதற்கான விசேட திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாவட்ட விவசாயிகளுக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தும் பயிற்ச்சிப் பட்டறை 2013.02.11 நிந்தவூர் தோப்புக் கண்டம் சுற்றுலா விடுதியில் கயறு குருப் ஒப் கம்பெனி நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது .
இப்பயிற்ச்சிப் பட்டறைக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம்.நசீர் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.தாகிர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இப்பிரதேச விவசாயிகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் நன்மை பயக்கவுள்ள இத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நெல்லுக்கான அரச கட்டுப்பட்டு விலையிலும் கூடுதலாக 1kg இற்கு 2 ருபா அதிகமாக கொடுத்து குறித்த திட்டத்தின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அதன் மூலம் வினாகிரி மற்றும் ரைஸ், கிரக்கர் என்பனவற்றினை உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நோக்கினை கொண்ட ஒரு பாரிய தொழிற்சாலை ஒன்றை இப்பிரதேசத்தில் பல மில்லியன் ரூபா முதலீடில் விரைவில் அமைக்கவுள்ளதாகவும் குறித்த கம்பனி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தின் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment