Header Ads



காதலர் தினத்தன்று தாக்குதல்கள் நடடைபெறலாம் - இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு


மும்பையின் முக்கிய இடங்களில் காதலர் தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்ம அழைப்புக்கள் வந்துள்ளன. 6 பயங்கரவாத அமைப்புக்களைச் சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. காதலர்கள் அதிகம் கூடி காதலர் தினத்தை கொண்டாடும் ஜூஹூ சவுபத்தி அல்லது பந்த்ரா பந்த்ஸ்டண்ட் அல்லது இரு இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்ம அழைப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மும்பை போலீஸ் கமிஷ்னர் சத்யபால் சிங், அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மும்பை மற்றும் அதனைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்துமாறும், மக்கள் அதிகம் கூடும் விமானநிலையம், ரயில்வே நிலையம், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

காதலர் தின கொண்டாட்டத்திற்கு சிவ சேனா கட்சியினரே அதிகளவில் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவர் என போலீசார் எதிர்பார்த்து இருந்த வேளையில் பயங்கவாதிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் படை‌யினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.