திருகோணமலைக்கு பிரதியைமச்சர் பதவி பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியுடன் பேசுவேன்
(எம்.பைஷல் இஸ்மாயில்)
திருகோணமலை மாவட்டத்துக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்று பெற்றுத்தருவதற்கு ஜனாதிபதியுடன் பேசுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறப்பினர்களுடனான சந்திபு இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவி;த்துள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்துக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்று பெற்றுத்தரப்படும் என்ற எதிர்பார்பில் உள்ள கட்சி ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது பதவி கிடைக்காததையிட்டு கட்சியுடன், தலைமைத்துவத்துடனும் அதிருப்பி அடைந்த நிலையில் உள்ளனர்.
இந்த விடயமாக கட்சி தலைமைப்பீடத்திற்கு அவசர கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர். அக்கடிதத்தில் மிக முக்கிய விடயமாக குறிப்பிடப்பட்டிருந்தவை கட்சித் தலைமை எம்முடன் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள வேண்டும். என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.
அதற்கு அமைவாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எமது கட்சியுடன் எவ்வித கலந்தாலோசனைகளும் இன்றியே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பில் எனக்கு தெரியாது. இவ்விடயமாகவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அரசுக்கு ஆதரவு வழங்குவது பற்றியும் ஜனாதிபதியுடன் நான் பேசுவதோடு, பிரதி அமைச்சர் பதவி ஒன்றினை இம்மாவட்டத்திற்கு பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பேன். எனவும்; அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இறக்ககண்டி பாம் விலேஜ் விடுதியில் நேற்று 2013.02.04 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தரகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Trincomalee ku deputy minister tharuvaendu solreenga. But neenga ithuvarai tholvi adayame vetri petru varum Amparaiku, kurippa Kalmunaiku enna seiyap poaringa SIR?
ReplyDelete