Header Ads



டுபாயிலிருந்து படுகாயமடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ள இலங்கை பெண்


டுபாய்க்கு பணிப்பெண்ணாக  சென் றிருந்த இலங்கைப் பெண்ணொருவர் அங்கு படுகாயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியுள்ளார். குளியாப்பிட்டி கிரிந்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் இலங்கை வந்துள்ளதாக கட்டுநாயக்க  விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தப் பெண் டுபாய்க்கு கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி சென்றதுடன், அங்கு பணிபுரிந்த இடத்தில் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து  தப்பிச் சென்று தனியார்  முகவர் நிலையமொன்றில் தஞ்சமடைந்தபோது அங்கு அதிகாரியொருவரினால் தாக்குதலுக்கு உள்ளாகியே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

படுகாயமடைந்த நிலையில் நாட்டுக்கு திரும்பிய இந்தப் பெண் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.