Header Ads



அம்பாறையில் முதலிடம் பெற்ற நிந்தவூரைச் சேர்ந்த மாணவனுக்கு பாராட்டு



(எம்.பைஷல் இஸ்மாயில்)

அம்பாறை மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற நிந்தவூரைச் சேர்ந்த மாணவன் எச்.முஹம்மது சஹாஜிதீனின் வீட்டிற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன வாழ்த்தியுள்ளார்.

மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை பாராட்டி கௌரவிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மாணவனின் வீட்டுக்குச் சென்று அம்மாணவனுக்கு மாலை அணிவித்து பாராட்டி நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருள் என்பவற்றை வழங்கி அவரது தாய், தந்தையரையும் வாழ்த்தினார்.

நமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையில் ஏழை மாணவர்களும் சிறப்பான உயர் கல்வியினைப் பெற்றுக் கொள்வதற்கான பல திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படுவதால் எந்த ஒரு ஏழை மாணவனும் கவலை கொள்ளத் தேவையில்லை என இங்கு பியசேன எம்.பி தெரிவித்தார்.

மேற்படி மாணவன் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியோடு உயர்தரக் கல்வியையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments

Powered by Blogger.