Header Ads



கபூர் கட்டடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்றது

(Tn) கொழும்பு கோட்டையிலுள்ள கபூர் கட்டடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று 22 ஆம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையேற்கப்பட்டதற்கான உத்தியோக பூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதாக அதிகார சபையின் பணிப்பாளர் அபய தனவர்த்தன தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலையடுத்து கொழும்பு பிரதேச செயலாளரை சந்தித்த அதிகார சபையின் பணிப்பாளர், உத்தியோகபூர்வமாக கட்டடத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. கொழும்பு கோட்டையின் புராதன சின்னமாக விளங்கும் இக்கட்டடத்தை புனரமைத்து மீண்டும் மிளிரச் செய்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். சுமார் 6 ஆயிரம் சதுர அடி விஸ்தீரணத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் நான்கு மாடிகளைக் கொண்டது. இதன் புனர் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.


No comments

Powered by Blogger.