Header Ads



தனது மகளை கொலை செய்த கொடூர தந்தையின் கதை..!

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பைஹான் அல் காம்தி என்பவர் தனது மகளை கொலை செய்த விவகாரம் ஊடகங்களில் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ளது. அவர் மதப் போதகர் என்பதும், தனது ஐந்து வயதேயான மகளை மிக மோசமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தும் அவருக்கு உரிய தண்டனை வழங்கப் படாமல் விடுதளையாகியுள்ளமையே சர்ச்சைக்கான காரணம். 

இவர் தனது குழந்தையான லமா அல் காமிதியை மிகவும் கொடூரமாக தண்டித்ததை ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு காரணம்  அக்குழந்தை மீது இவருக்கு ஏற்பட்ட சந்தேகமே. அதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாகவும் அவரின் தாய் தெரிவித்துள்ளார். 

இவரின் கொடூர தண்டனைகளே குழந்தை லாமாவின் மரணத்துக்கு காரணம் என்பதை வைத்திய அறிக்கயை வைத்து நீதி மன்றம் உறுதி செய்தது. 

தந்தை பிள்ளையை கொலை செய்தால் அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப் படமாட்டாது என்பது இஸ்லாமிய சட்டம். அதற்காவே குருதிப் பணத்தை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. எனினும் வேறு  நியாயமான காரணங்கள் இருப்பின் அதற்காக மேல் முறையீட்டுக்கான உரிமை குழந்தையின் தாய்க்கு வழங்கப் பட்டுள்ளது.   

அவர் தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தார் எனும் தகவல் மேற்கு ஊடகங்களின் மூலம் உண்மைக்கு மாற்றமான திரிபு படுத்தப் பட்ட செய்தி என்பதை அரபு ஊடகங்களின் செய்திகளைப் படிப்பவர்கள் மிக எளிதில் உணர்ந்து கொள்வர். அதே நேரத்தில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்றறிந்த மார்க்க அறிஞர் இல்லை. முன்னாள் அனுபவமுள்ளவர் என்ற வகையில் சிகரட், குடி மற்றும்  போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை அரபு மொழி ஊடகங்கள் தெளிவு படுத்துகின்றன.  

குழந்தை மீதுள்ள எல்லை மீறிய அக்கறையே அவரை இக்கொடூர செயலில் தள்ளிவிட்டுள்ளது என்பது அவர் கூறும் காரணத்திலிருந்து புலப் படுகிறது. அவர் கூறுவது உண்மையாக இருந்தால் குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் அவருக்கு குழந்தை மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் உருவான கட்டுப்படுத்த  முடியாத கோபத்தினால் காட்டுமிராண்டித் தனமாக குழந்தையை தாக்கியுள்ளார். இது தண்டிக்கப் பட வேண்டிய குற்றச் செயலே. இதற்கு காரணம் அவர் வாழ்ந்து பழக்கப் பட்டுள்ள கடந்த கால வாழ்க்கையாகும்.  படிப்பினைக்காக அரபு ஊடகமொன்றில் வெளியான வாழ்க்கை அவரின் வரலாற்றை இங்கே தருகிறேன்,

பைஹான் அல் காமிதி யின் தந்தைக்கு இரண்டு குழந்தைகள் மூத்தவர் இவரும், இவரின் தம்பி முஹம்மத் அல் காமிதியுமாவர். இவருக்கு 1 வருடமும் மூன்று மாதங்களே ஆன நிலையில் இவரின் தாய் தந்தையருக்கு தகராறு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இவரின் தந்தை செய்த குற்றமொன்றுக்காக சிறை வைக்கப் படுகிறார். இவரின் தாயோ மறுமணம் முடித்து வேறு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகிறார்.

இப்படியாக அநாதரவாக்கப் பட்ட இவரை இவரின் பாட்டியும், சகோதரரை வேறொரு உறவினரும் பொறுப்பேற்கின்றனர்.

சரியான பாசத்தை பெரும் வாய்ப்பு அவருக்கு அங்கே கிடைக்கவில்லை; காட்டுமிராண்டித் தனமாக நடாத்தப் படுகிறார். எதற்கெடுத்தாலும் அடி, உதை... இப்படியாக நரக வாழ்க்கையே அவர் வாழ்ந்துள்ளார். 

ஒன்பது வயதை அடைந்த காமிதி தனது தாயிடம் சேர வேண்டும் என்று எண்ணி தாயை தேடி அலைந்துள்ளார். தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டதும் அவரிடம் செல்லவே அங்கே தாயின் கணவர் இவரை ஏற்க மறுத்து விடுகிறார்.  இதனால் அநாதை இல்லத்தில் தஞ்சமடைய வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார். அங்கே தனது 13 ம் வயது வரை வாழ்கின்றார்.  

அங்கிருந்து வெளியான பிறகு தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் மது, போதைக்கு அடிமையாகி இருள் சூழ்ந்த வாழ்க்கை  வாழ்கிறார் பைஹான் அல் காமிதி. இப்படி இருக்கும் வேளையில் ஒரு நாள் எதிர் பாராமல் தனது சகோதரர் முஹம்மத் அல் காமிதியை சந்திக்கிறார். அவரை பொறுப்பெடுத்த உறவினர் நல்ல முறையில் பராமரித்துள்ளார். 

தனது தம்பியை சந்தித்த களிப்பில் இருந்த இவருக்கு இன்னுமொரு அதிர்ச்சி தாகவல் காத்திருக்கும் என்பதை இவர் உணர்ந்திருக்கவில்லை. அதுதான் அவரின் தம்பி முஹம்மத் வீதி விபத்தில் பலியாகி விட்டார் எனும் செய்தி. 

இப்படியாக காலம் கடத்தி வந்த இவர் ஒரு நாள் ரமலான் மாதத்தில் தனது காரில் இருக்கும் போது போதனைக்குரிய பாடல் ஒன்றை கேற்கிறார். இதனால் தாக்கமடைந்த இவர் தனது கடந்த கால சீரழிந்த வாழ்வை நினைத்து கைசேதப் பட்டு சீர் திருந்தி தனது வாழ்வை மாற்றிக் கொள்கிறார். எல்லா தீய பழக்கங்களையும் தூர எரிந்து விட்டு ஒரு புதிய வாழ்க்கையை தனது 26 வது வயதில் ஆரம்பிக்கிறார் பைஹான் அல் காமிதி. தான் வாழ்ந்த முற்றிலும் இருள் சூழ்ந்த வாழ்க்கை யாரும் வாழக் கூடாது என்பதற்காக வாலிபர்களுக்கு அறிவுறுத்த  ஆரம்பிக்கிறார். இதனால் பிரபல்யம் அடைந்த இவரை சில உள்நாட்டு தொலைக் காட்சி நிறுவனங்களும் இவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடாத்தியுள்ளன. 

இதுதான் இவரின் கதை! மற்றபடி ஊடகங்கள் சொல்லுவது போன்று பெரிய மத போதகர் இல்லை.

கரடு முரடான பாதையை கடந்து வந்த இவர் மீண்டும் அதே பாதையை நோக்கியே பயணித்துள்ளார். அது தான் உண்மை! 

பிள்ளைகளின் நலனில் அக்கறைக் கொள்ளாமல் விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதியினருக்கும், பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக கண்டிக்கும், தண்டிக்கும் பெற்றோருக்கும் இது பெரும் பாடமாகும். குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உரிய பாசம் வழங்கப் படாத போது அவர்கள் பெரிய வயதை அடைந்து விட்ட போதும் அது தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.



6 comments:

  1. பிள்ளைக்காக தந்தை பழிக்குப் பழி வாங்கப்படமாட்டார் என்ற சட்டம் சாிஅத் சட்டம் அல்ல.

    ReplyDelete
  2. kolaiku kolaithane thandanai? athuthane hathees.. rizana thawaruthalaga nadanthatku marana thandanai. iwaruku maddum widuthalaya? something wrong some where.. islam cannot be wrong..

    ReplyDelete
  3. அனாதையாக வளர்ந்தால் இப்படியான கிருக்கனாகத்தானா மனிதர்கள் வருவார்கள் ??? எத்தனை அனாதைகள் எவ்வள்வு மகத்துவமான முன் உதாரணங்களுடன் வாழ்கின்றனர் இப்படி இவனது கடந்த காலத்தை பற்றி போடுவதால் யாறுக்குமே இவன்மேல் இறக்கம் பிறக்காது அனாதையாக இருந்தும் கஷ்டங்களை அறிந்திருந்தும் இப்படி செய்திருக்கிறானே என்று கோபம்தான் எழும்

    ReplyDelete
  4. Sharia law if another person kill then he also same way kill,no chance keep him.

    ReplyDelete

Powered by Blogger.