இலங்கையில் நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டுக்கு தடை...?
நிரந்தரமான குடும்பக்கட்டுபாட்டு முறைமைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அரசாங்கம் தனியார் மற்றும் அரசாங்க வைத்தியசாலைகள், மருத்துவ நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
ஏதேனும் கட்டாய மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே எதிர்காலத்தில் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எந்தவிதமான எச்சரிக்கையையும் விடுக்காமல் அரசாங்கம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மருத்துவ நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
என்ன காரணத்திற்காக இவ்வாற நிரந்தரக் குடும்பக்கட்டுப்பாடு முறமைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிங்கள பௌத்த பெண்களுக்கு அவர்களது விருப்பத்தை அறிந்து கொள்ளாமல் குடும்பக்காட்டுப்பாட்டு சிகிச்சை வழங்கி வருவதாக பௌத்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸலை பொதுபல சேனா சந்தித்தபோது குடும்பக் கடட்டுப்பாடு செய்து கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட வயதை அதிகரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகிலே சிறந்த செல்வமாம் குழந்தை செல்வம். குடும்பக் கட்டுப்பாடு இஸ்லாத்தில் எப்போதோ தடுக்கபட்டது .
ReplyDeleteஉங்களுக்கே உணவளிக்கும் இறைவன் உமது சந்ததிகளுக்கு உணவளிக்கமாட்டானா ?
ஆனாலும் அவனின் அருள் இல்லாமல் எதுவும் கிடைக்காது.
நல்ல விடயம். அல்லாஹ்வின் படைக்கும் உரிமையில் கையடிக்க மனிதனுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது? இவர்களுக்கும் (பெற்றோர்) அவர்களுக்கும் (பிள்ளைகள்) உணவளிப்பவன் அல்லாஹ்தானே! இந்த இந்த ஷரீஆ சட்டத்தை அமுல் செய்ய பின்னின்ற பொது பல சேனாவுக்கு எனது பாராட்டுக்கள். இந்த முடிவை எடுத்த ஜனாதிபதிக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள். இத்தோடு மட்டும் நின்றுவிடாதீர்கள். இவ்வாறு சட்டம் போட்டு கஷ்டப்பட்டு பெற்றெடுத்த பிள்ளைகளை சீரழிக்கும் மற்றொன்றும் உள்ளது. அதனையும் தடை செய்வீர்களா? அதுதான் மதுபானமும் போதை வஸ்த்துக்களும். போதை தரக் கூடிய அனைத்து விதமான வஸ்த்துக்களையும் இந்த அழகிய தேசத்தில் தடை செய்ய வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றேன். இதுதானப்பா ஷரீஆ என்பது.
ReplyDelete