Header Ads



அமைச்சர் றிசாத் பதியுத்தீன் ஈராக் விஜயம்



(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கை தேயிலையினை பெருமளவில் இறக்குமதி செய்யும் ஈராக் நாட்டுடன் மேலும் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். உலக சாடுகளில் இலங்கை தேயிலையினை கூதலாக இறக்குமதி செய்யும் ஈராக்  தேசத்துடன் இரு தரப்பு வர்த்தகம்செயற்பாடுகளை மெ்படுத்தும் நோக்கத்துடன் அமைச்சர் றிசாத் பதீயுதீனும் வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.டி.பெர்ணான்டோவுதம் ஈராக்குக்கு விஜயத்தினை மேற்கொண்டு ஈராக் நாட்டின் வர்த்த்க அமைச்சர் கீர் எலா ஹஸன் பபாகர் முஹம்மதை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை ஏற்றுமதியாளர்கள் தேயிலை ஆராய்ச்சி நிறுவன உத்தியோகஸ்தர்களும் இலங்கை பிரதி நிதிகள் குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் இலங்கைக்கு சார்பாகவே உள்ளது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். ரஷ்யா, ஈரான், சிரியா மற்றும் துருக்கிக்கு அடுத்தாக இலங்கை தேயிலையினை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடு ஈராக்காகும்.ஈராக்குக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமானச் சேவையினை ஆரம்பிக்க வேண்டும் என ஈராக்கின் வர்த்தக அமைச்சர் ஹஸன் இலங்கை அரசாங்கத்திடம் முன் வைக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் கூறினார்.

No comments

Powered by Blogger.