Header Ads



முஹம்மது முர்ஸிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஸலபிகள்

முஹம்மது முர்ஸி ராஜினாமாச் செய்யக் கோரி எகிப்தில் எதிர்கட்சியினர் சிலர் தேவையற்ற போராட்டங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிபர் ராஜினாமாச் செய்துவிட்டு புதிய தேர்தலை நடத்தும் சூழல் இல்லை என்றும், நாட்டின் அனைத்து கட்சிகளுடன் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இஸ்லாமிய கட்சியான ஸலஃபிகளின் அந்நூர் கட்சி தெரிவித்துள்ளது. இதனை கட்சியின் தலைவர் யூனுஸ் மகியூன் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் மேலும்கூறுகையில், ‘நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளுடனும் எங்கள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடரும்’ என்று அவர் கூறினார். எகிப்தில் குழப்பங்களை உருவாக்க முயலும் சில எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை பல லட்சம் நபர்கள் பங்கேற்கும் பேரணியை நடத்தப்போவதாக  இன்னொரு இஸ்லாமிய கட்சி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.