Header Ads



முஸ்லிம் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்


(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று 19-02-2013  சமர்பிக்கபட்ட கண்டனத் தீர்மானம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று  செவ்வாய்க்கிழமை திருமலையிலுள்ள மாகாண சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மதிய இடைவேளைக்குப் பின்னர் இக்கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது ஹலால் தொடர்பில் ஆளும் தரப்பு சிங்கள- முஸ்லிம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 

அதவேளை மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க முன்மொழிந்த திருத்தத்துடன் குறித்த கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

8 comments:

  1. மாகான சபை இப்போதான் உருப்படியா ஒரு விடயம் செய்திருக்கு.............
    நன்றி ஜெமீல் சேர்

    ReplyDelete
  2. மாகான சபையில் இவ்வாறான கண்டனப் பிரேரனையை கொன்டு சென்றது தூரநோக்கற்றதும் குறுமதியுமாகும். ஏனெனில் கிழக்கு தவிர்ந்த அனைத்தும் பெரும்பான்மை சகோதரர்களின் கையில் இருக்கத் தக்கதாக இங்கு இப்பிரச்சினையினை ஆரம்பித்து வைத்தமையானது அவர்களையும் இவ்வாறான கண்டனப் பிரேரனைகளை எம் சமூகத்திற்கு எதிராக கொன்டுவருமாறு களத்தில் இறக்கிவிட்டுள்ளீர்கள்.போதாக்குறைக்கு இதுவிடயத்தில் மெளனமாகவிருந்த கிழக்கு சிங்கள சகோதரர்களையும் இதுவிடயத்தில் வாய் திறந்து வாதிக்கவைத்துள்ளீர்கள். இது உங்களுக்கு சாதனையாகவிருக்கலாம். உங்கள் அரசியலுக்கு சாதகமாகவும் இருக்கலாம் ஆனால் இது எம் சமூகத்திற்கு ஓர் அபாய சமிக்சை என்பதை புரிந்து கொள்ளாமையானது மிகவும் வேதனையான விடயமாகும். இதன் பாதிப்புக்களும் பின்விளைவுகளும் விரும்பத்தகாதவைகளாகவே இருக்கும்.

    ReplyDelete
  3. இது விடயத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்டணங்களும் தீர்மானங்களும் மேற் கொள்வதானது தற்போதைய சூழலில் அவ்வளவு பொருத்தமானதல்ல.

    ReplyDelete
  4. பொது மக்கள் தயவு செய்து இதுவிடயத்தில் அரசியல் வாதிகளின் பின்னால் செல்வதனை விடுத்து உலமாக்களின் பின்னால் அணிவகுப்பதே சாலச் சிறந்ததாகும். மார்க்கவாதிகளே இஹ்லாசுடன் மக்களை வழிநடத்துவார்கள். அரசியல் வாதிகள் கண்டனம் என்றும் கோசம் என்றும் குழப்பிவிட்டு மீன் பிடிக்கவே முயல்வார்கள்.

    ReplyDelete
  5. இவ்வாறான கண்டனப் பிரேரனைகளை விடுத்து ஹலால் தொடர்பான விழிப்புனர்வு நிகழ்ச்சிகளை மாகான மட்டத்தில் ஒழுங்கு செய்து நடாத்தியிருக்கலாம். மாறாக கண்ணடங்களினால் கிழக்கில் இருசமூகத்திற்கிடையில் இருந்த உறவும் அறுந்து போயுள்ளது

    ReplyDelete
  6. முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு விடயம் நடந்தால் அதற்கு நாகரீகமான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம். அந்த அடிப்படையில் திரு. ஜமீல் அவர்களினது முயற்சியை பாராட்டுகிறேன். அதிலும் இந்த விடயம் மாகாண சபையில் ஏகமனதாக ஜாதி மத பேதமின்றி நிறைவேற்றப்பட்டதென்பது நல்ல விடயம். இதற்காக இந்த சபையின் அனைத்து உறுப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக பொது பல சேனவின் நடவடிக்கையை கண்டிக்கும் போது ஏன் முஸ்லிம் தலைவர்கள் கண்டிக்கக்கூடாது....??? நம்மவர்களின் ஈமானுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.

    ராஜபக்ச அன் கம்பனி திட்டமிட்டு நாடாத்தும் நாடகம் தான் இதெல்லாம்..!!!! முடிந்தால் இந்த கம்பனியை இழுத்து மூடுவதற்கு இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு முதுகேளும்புண்டோ..??

    நக்குண்டார் நாவிழந்தார்.. சிலர் நக்கு கிடைக்கும் என்ற நட்பாசையால் தரணம் பார்த்து நிக்கின்றார்கள்.

    முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களின் அவமானச் சின்னங்கள் என்று மக்கள் கூருவதட்கு முன்னால் ஒரு நல்ல அரசியல் தீர்வொன்றை முன்னேடுப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  7. ஹலால் ஹராம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் இப்படியான பிரேரணை சமர்ப்பிக்கப் போனால் பிரச்சினைகள் தீராது, மாறாக குழப்பங்கள்தான் அதிகரிக்கும். பெரும்பான்மை இன மாகாண சபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இவர்கள் எப்படி பதிலளித்தார்களோ தெரியாது. இஸ்லாத்தை பற்றி சரியான தெளிவு வழங்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. மாறாக தப்பு தப்பாக விளக்கமளித்திருந்தால் இஸ்லாத்தின் மீதான வெறுப்புதான் அதிகரித்திருக்கும். அல்லாஹு அ'லம்.

    ReplyDelete

Powered by Blogger.