மன்னார் வேப்பங்குளம் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வகத்தினரின் கவனத்திற்கு..!
(ஜெஸா)
வரலாற்றுத் தொன்மைமிக்க மன்னார் வேப்பங்குளம் ஜூம்ஆ பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கடந்த 8 ஆம் திகதி ஜும்ஆத் தொழுகையுடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தொன்னூறில் புலிகளால் விரட்டப்பட்டு இருபது வருடங்களாக ஊருக்கு வெளியே வசித்து வந்த அனைவரும்போல் கலந்துகொண்ட இந்த நிகழ்வு முசலிப் பிரதேசத்தில் மீள் குடியேறிய அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
யுத்த வடுக்கள் நீங்கி, வாழ்வு மலரும் என்ற நம்பிக்கையை பலரின் முகங்களிலும் வாசிக்க முடிந்தது. கம்பீரமாக எழுந்து நிற்கும் பள்ளிவாசல் முசலி சமூகத்தின் இன்னொரு தனியடையாளமாக திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஆரவாரங்களுக்கிடையில் வேப்பங்குள வரலாற்றின் அடையாளத்தை அழித்துவிட சிலர் முற்படுவது கவலையளிக்கிறது.
யுத்ததினால் சின்னாபின்னமான பள்ளிவாசலின் எச்சமாக காணப்பட்ட பள்ளிவாசலின் முகப்புச் சுவரும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சம் பரம்பரை பரம்பரையாக பேணிப்பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்.
யுத்தத்தில் இழந்து போன எமது வாழ்வுக்கு அதனைவிட வேறெதுவும் சான்றாக அமைந்து விட முடியாது. இருப்பினும் பல்வேறு காரணங்களுக்காக அதனை இடித்து விட்டனர் என்பது நாளை வருத்தப்படவேண்டிய விடயமாக மாறலாம்.
அவ்வாறே, வேப்பங்குள பள்ளிவாசல் வரலாறு நெடுகிலும் முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் என்ற பெயர் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளமை வரலாற்று பெருமைமிக்க செய்தியாகும். எனினும் இந்த வரலாற்றுப் பெருமை தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் தொடர்பான அனைத்து பகிரங்க ஆவணங்களிலிருந்தும் திட்டமிட்டு அகற்றப்பட்டுள்ளது.
முஹிதீன் பள்ளிவாசல்கள் இலங்கையின் முஸ்லிம் கிராமங்களின் சமூக வளர்ச்சியின் அடையாளமாகும். முஹிதீன் பள்ளிவாசல்கள் காணப்படும் முஸ்லிம் கிராமங்களுக்கு இடையில் ஏதோ ஒரு பரஸ்பர வரலாற்று கலாசார தொடர்பும் உறவும் நிலவுகிறது.
முஹிதீன் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்ட காலப்பகுதி, மற்றும் அக்காலப்பகுதிக்கே உரிய சமூக தனித்துவங்கள் மற்றும் கலாசார அம்சங்கள் குறித்த ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த தனித்துவத்தின் அடையாளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவை எமது வேப்பங்குளத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதும் அந்த அடையாளத்தை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
எனினும் திட்டமிட்ட வகையில் ஆவணங்கள் மட்டும் அறிவித்தல்களிலிருந்து முஹிதீன் என்ற பெயருக்குப் பதிலாக வேப்பங்குளம் ஜூம்மாப் பள்ளிவாசல் என்ற அடைமொழியே பயன்படுத்தப்படுவது முஹிதீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரினால் இடம்பெறும் இஸ்லாத்துக்கு முரணான அம்சங்களுக்காகவா என்ற கேள்வி எழுகிறது.
முஹிதீன் ஜூம்மாப் பள்ளி என்ற பெயரும் முஹிதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் பெயரில் இடம்பெறும் இஸ்லாத்துக்கு முரணான அம்சங்களுக்கும் இடையில் முடிச்சுப்போடுவது அறிவுக்குப் பொருந்தாததாகும். ஓருவேளை அன்சாருல் சுன்னதில் முகம்மதியா என்ற அமைப்பின் மூலம் இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டதனால் அந்த அமைப்பின் விசுவாசிகள் சிலர் இவ்வாறான பெயர் மாற்றத்துக்கு முற்பட்டிருக்கலாம்.
அல்லது பள்ளி கட்டட நிர்மாணப்பணிகளுக்கு கொடைவழங்கிய ஆலு இப்றாஹீம் அவர்களுடைய பெயரை சூட்டுவதற்காக இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.
இப்பள்ளி நிர்மாணம், நிர்வாகம், அபிவிருத்திகள் குறித்து தாறுமாறான விமர்சனங்கள் இருப்பினும் அவை குறித்து எழும் கவலைகளை விட இப்பெயர் மாற்றம் அதிக கவலைக்குரியது. நாமே நமது வரலாற்றை அழிப்பதாகும்.
மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. ஆகையால் மஸ்ஜித்கள் அல்லாஹ்வின் பெயர் கொண்டே அழைக்கப்பட( பெயர் சூட்டப்பட) வேண்டும். நிர்வாக தேவை நிமித்தம் வேரு பெயர் சூட்டப்பட வேண்டிய ஒரு நிலமை ஏற்பட்டாளும் ஒரு ஊரின், ஒரு ஜமாத்தின்,அல்லது ஒரு பிரதேசத்தின் பெயரை அல்லாஹ்வின் வீட்டுக்கு சூட்டினாலும் வேரு ஒரு தனி மனிதனின் பெயர் கொண்டு அதிலும் அல்லாஹ்விற்கு இனையாக மனிதர்களால் தவறாக அந்தஸ்து கொடுக்கப்பட்ட ஒருவரின் பெயர் சூட்டுவது நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல முடியாத ஒரு நிலையை நமக்கு தோற்றுவிக்களாம்.
ReplyDeleteநமக்கென ஒரு வரலாறு, தனித்தும், கலாச்சாரம் மற்றும் இதர ஊர் மஸ்ஜித்கள் மற்றைய ஊர் முஸ்லிம்கள் மத்தியில் நமக்குள் ஒரு சகோதர பிணைப்பு ஏற்படுத்தி தந்தவன் வல்ல நாயன் அல்லாஹ் என்றிருக்க , இல்லை இவற்றுக்கெல்லாம் காரணம் நாம் அறியாமல் சூட்டிய அந்த அவுலியா ஆண்டகை களின் பெயர் தான் என்று அடம் பிடிப்பது எவ்வகையில் ஞாயம்;