கல்முனை சிவில் பாதுகாப்புக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் (படங்கள்)
(சௌஜீர் ஏ. முகைடீன்)
கல்முனை சிவில் பாதுகாப்புக் குழுவின் பிரதிபலன் சம்பந்தமான கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (03.02.2013) காலை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்ன தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.நாணயகார, கல்முனை முஸ்லிம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, தமிழ் பிரதேச செயலாளர்களான எம்.நௌபல், கே.லவநாதன், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், கிராமசேவகர்கள், பிரதேச வர்த்தக சங்கங்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிவில் பாதுகாப்புக் குழுவானது மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டு, கடந்த யுத்தகாலங்களில் நாட்டின் அமைதிக்காக சிறந்த பங்களிப்பு செய்தும் வந்தது. இக் குழுவானது நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தன. அதேவேளை யுத்தத்திற்கு பின் இவை தமது செயற்பாட்டை இழந்தமை குறிப்பிடத்தக்கது. சிராமங்களில் உள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களை மீண்டும் திட்டமிட்டு, மீள ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயற்பட்டுவருகின்றது.
Post a Comment