'மத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்' ஸர்மிளா ஸெய்யித்
(தமிழ் இணையமொன்றில் ஸர்மிளா ஸெய்யித் பெயரில் எழுதப்பட்டிருந்த கட்டுரையே இது)
விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரும் இஸ்லாமியர்களின் கோரிக்கையின் காரணத்தை முழுமையாக விளங்காத சிங்கள நண்பர் ஒருவர் தற்செயலாக அதுபற்றிக் கேட்டார். 'இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்' என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?' என்றார் நண்பர்.
இந்தக் கேள்வி யாரோ ஒரு சிங்களவரினுடையது மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழுகின்ற இஸ்லாமியர் அல்லாத அனைவரினுடையதும்தான். சில இஸ்லாமியர்களினுடையதாயும் இருக்கலாம். விஸ்வரூபம் திரைப்படத்தின் உப்பு, காரம் தெரியாமலே இலங்கையில் தடை செய்தாயிற்று. தமிழகத்தில் அனைத்திந்திய ஜமாஅத் தடை செய்யக் கோரியதன் எதிரொலியாக இலங்கையிலும் அது செய்யப்பட்டது. தடையுத்தரவை நீக்குவதா வேண்டாமா என ஆலோசிப்பதற்காக உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களுக்கு அத்திரைப்படம் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. உலமாக்கள் புத்திஜீவிகளால் அந்தத் திரைப்படம் பார்க்க முடியுமாக இருந்தால் சாதாரண மக்களுக்குத் தடை செய்வதிலுள்ள நியாயமென்பது பிரத்தியேகமானது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கின்ற உலமாக்கள் திரைப்படம் பார்க்க முடியுமா என்பது மற்றொரு கேள்வி; விமர்சனத்திற்குரியது.
நாம் எத்தனையோ சினிமாக்களைப் பாத்திருக்கிறோம். மிகக் குரூரமானதும் நெஞ்சை நெருக்குவதுமான சமூகக் கொடுமைகளையும் பார்த்து ரசித்துவிட்டு எதுவுமே நடவாதது போல திரையரங்கிலிருந்து வெளியேறி விடுகின்றோம். ஏனைய சமயங்களைக் கேள்விக்குட்படுத்துகின்ற குறிப்பாக இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியக் கதைகளையும் பாத்திரங்களையும் விமர்சிக்கின்ற, பாரம்பரியங்களை உடைத்தெறிகின்ற சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் மிக ஆரோக்கியமான விமர்சனங்கள், கருத்தியல்களால் சமூகவியலாளர்களும் சமயத்தவர்களும் அவற்றை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், கருத்தியல் வெளிக்கு முன்வரவும் தயாரில்லாதவர்கள். சினிமாவில் சித்தரிப்பதால் ஒன்றும் கிழிந்துவிடப் போவதில்லை என்று தம் வேலையைப் பார்க்கத் திராணியற்றவர்கள். ஒரு சினிமா வந்துதான் சமுதாய மாற்றம் வந்துவிடப் போகின்றது என்றால், சினிமா பார்த்துத்தான் சமூகம் சீரழிந்துவிடப் போகிறதென்றால் இதுவரை வெளிவந்த இலட்சக்கணக்கான சினிமாக்களால் உலகம் மகத்தான அளவில் சீரடைந்திருக்கவேண்டும். அல்லது சீரமைக்கவே ஒண்ணாதளவில் சின்னாபின்னமாகியிருக்க வேண்டும். பத்தில் ஒன்றாகச் சும்மா வரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உலகத் தரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். அர்த்தமற்ற எதிர்ப்பே, அப்படி என்னதான் அதில் இருக்கின்றதென்று பார்ப்பதற்கு தூண்டச் செய்துள்ளது. தடையிட்டால் என்ன எங்காவது இணையத்தில் டௌவ்ண்லோட் செய்யலாமா, எவ்வளவு கொடுத்தாவது பிளக்கில் வாங்கலாமா என்று எல்லாரையும் பைத்தியம் பிடிக்கச் செய்திருக்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.
மேலைத்தேய நாடுகள் தங்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்கச் சதிகள் செய்வதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுயப் பிரச்சாரம் செய்து வருகின்ற சூழலில் சமீபத்தில் ரிஸானா றபீக் என்ற சிறுமிக்கு சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சிக்குப் பேரிடியாக அமைந்திருந்தது.
1999 ஆம் ஆண்டு துருக்கிய அரசு குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்துல்லா ஒச்சலானுக்கு மரணதண்டனை விதித்தது. மரண தண்டனை, மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் நீண்ட காலமாக உலகெங்கிலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலானுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னரே அது குறித்த விவாதங்கள் உலகெங்கிலும் முனைப்புப் பெற்றன. ஐரோப்பிய யூனியனின் நெருக்குதல் காரணமாக 2001ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மரண தண்டனையை முற்றிலும் கைவிட்டது. சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், குவைத், பர்மா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை மாற்ற முடியாத சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப் பலமான மதஅடிப்படையே இச்சட்டங்கள் நடைமுறையில் இருப்பதற்கான காரணங்களாகின்றன.
மரண தண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகளும், குரல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ள சமகாலத்தில் ரிஸானா றபீக் சிறுமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பல தளங்களில் விவாதிக்கப்பட வேண்டியதும், மனித உரிமைகளுக்கான அறைகூவல்களுக்கு பலமான பின்னடைவு என்பதும் ஏற்க வேண்டியவையே.
ரிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த கவலைகளை, அந்தச் செய்தி அளித்த ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலை சமீப காலங்களில் காணக்கூடியதாக இருந்தது. இஸ்லாமிய ஷரீஆ சரியா என்ற விவாதங்கள் எழுந்தன. இது மிக இயல்பானது, ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு விவாதங்கள் கருத்தியல்கள் மிக இன்றியமையாததாகின்றது. இதன்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பொங்கி எழுந்தனர். றிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியோ, பிழையோ யாரும் அது பற்றி மூச்சுவிடக்கூடாது, அது இஸ்லாமிய ஷரீஆ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருந்தது. மேனியில் வடுக்கள் தெரியக்கூடிய ஈச்சம் பாயில்தான் முஹம்மது படுத்துறங்கினார்; ஒட்டகத்தில் பயணித்தார். ஷரீஆவை அப்படியே பிசகாமல் பின்பற்றுவதாக கூப்பாடு போடுகின்றவர்கள் ஈச்சம் பாயில் படுத்து ஒட்டகத்தில் பயணிக்கலாமே!
இஸ்லாத்திற்கு எதிரான கருத்தொன்று எழும்போது அதனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, எதிர்கொள்வதற்கான பக்குவமற்றவர்களாகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களை நிரூபித்து வருகின்றனர். இலங்கையில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் வாழும் முஸ்லிம் இயக்கத்தவர்கள் எதிர்த்தலில் ஒரே பொதுக்குறியைக் கொண்டவர்கள்தான். தமிழகத்தில் நக்கீரன் இதழில் றிஸானாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை மிகக் கொடுமையானது என்று எழுதியதற்காக மனுஷ்யபுத்திரனுக்கு மிருகபுத்திரன் பட்டமளித்து அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தமிழக அரசியலில் முன்னிலையில் இருக்கும் கருணாநிதி, றிஸானாவின் மரணதண்டனையைக் கண்டித்தார் என்பதற்காக அவருக்கும் ஏச்சுப்பேச்சு. எதிர்கருத்தாளரை எப்படி எதிர்கொள்வதென்பதும், தனிமனிதனுக்கு இருக்கத்தக்க கருத்துச் சுதந்திரத்தையும், சமூகத்தில் தனிமனிதர்களுடைய வகிபாகத்தையும் இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறுக்கின்றதையுமே இவை காட்டுகின்றன. ஈழத்திலும் இது தொடர்பான பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.
மிகத்தொன்மையான வரலாற்றைக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏதோ நேற்றுத் தோன்றிய மதம் என்பது போலும், தப்பபிப்பிராயங்கள் ஏற்படுத்தச் சதிகள் நடக்கின்றன என்பதாகவும் வரிந்து கொண்டு செயற்படுவது கேலிக்கூத்தாகி ஏனைய சமூகத்தவர்கள் முகம்சுளிக்கின்ற குரோதத்தை ஏற்படுத்துகின்ற நிலைக்கு வந்துள்ளது.
முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே ஜனநாயகத்தின் இலட்சியம். இஸ்லாம் என்பதே சமாதான வழி மார்க்கம். இஸ்லாத்தின் முன்மாதிரி முஹம்மது மன்னிப்பை நல்லிணக்கத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியவர். இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நல்லிணக்கம் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஏனைய சமூகங்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மூடிய சமூகமாக, தொட்டாற்சிணுங்கி சமூகமாக, தொட்டதெற்கெல்லாம் கண்டனம், ஆர்பாட்டம், போஸ்டர் என கிளர்ந்தெழுகின்ற சமூகமாக நலிந்த சமூகமாக இஸ்லாமிய சமூகத்தை அடிப்படைவாதிகள் மாற்றி வருகின்றனர்.
பலநூறு பேரை கொத்து, கொத்தாக் கொன்று, கிராமங்கள் பலவற்றை அழித்து அட்டூழியம் புரிந்த 'சுமாமா' என்ற அராஜகனை முஹம்மது மன்னித்ததாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது. சுமாமாவைத் துன்புறுத்தவோ குறைந்தபட்சம் திட்டவோ செய்யவில்லை என ஸஹீஹ_ல் புகாரி என்ற ஹதீஸ் கிரந்தம் கூறுகிறது. தன் இளைய தந்தையின் ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவையே மக்கா வெற்றியின்போது முஹம்மது மன்னித்தார் என்று இன்னொரு ஹதீஸ் கூறுகிறது. அக்கிரமங்களில் ஈடுபட்டவர்களை முஹம்மது மன்னித்தாரென்றால் றிஸானா றபீக் போன்ற அறியாச் சிறுமிகளை மன்னிக்க முடியாதா என்ன?
ரிஸானா 2005ஆம் ஆண்டு சவூதி அரேயியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற சிறுமி. நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்தாள் என்று 2007ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கம் தீர்ப்பு வழங்கியது. 2013 ஜனவரி 09ஆந் திகதி சிறுமி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவினுடையது மதஅடிப்படைச் சட்டம் எனில் முஹம்மதின் முன்மாதிரியை கைவிட்டதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்களா அடிப்படைவாதிகள்?
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் றிஸானா றபீக் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தாள். அவளை விடுவிப்பதற்கு இஸ்லாமிய சமூகம் முயற்சி எடுத்ததா? மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இஸ்லாமிய சமூகம் ஆராய்ந்ததா? பொருளாதாரத்தை ஈட்ட பெண்கள் நாடு கடந்து செல்கின்றளவு இருக்கின்ற சமூகத்தேவை குறித்தும், அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்போதாவது அக்கறைப்பட்டுள்ளார்களா? பணிப்பெண்கள் என்ற பெயரில் அரபு நாடுகளில் பாலியல் அடிமைகளாகச் சிக்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களை மீட்கவும், மறுவாழ்வளிக்கவும் அடிப்படைவாதிகளிடமுள்ள தீர்வுதான் என்ன? இஸ்லாமிய சமூகத்துக்குள்ளே புரையோடிக் கிடக்கின்ற சமூகக் கொடுமைகளுக்காக அக்கறைப்படாத அடிப்படைவாதிகள் யாராவது கருத்துக் கூறும்போது, எழுதும்போது, சினிமாவில் சித்தரிக்கும்போது மட்டும் இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கச்சைகட்டிக் கொண்டு வந்துவிடுவது ஏன்?
இத்தகைய முரண்பாடான சூழ்நிலையினிடையே முஸ்லிம்கள் தீவிரவாதிகளைப் போன்று செயற்படுகின்றார்கள் என்று மேலைத்தேய நாடுகள் என்ன உள்நாட்டுக்குள்ளேயே குரல்கள் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே.
பல்லின சமூகத்திற்குள் வாழுகிறோம் என்பதையே பல தருணங்களில் மறந்துவிடுவதும், இன்றைய செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளை எவ்வளவு தூரம் பாதிக்கக்கூடும் என்பது குறித்ததுமான விரிவான நோக்குகளும் சிந்தனைகளும் இல்லாமலேயே இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் மேலும், மேலும் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமூகம் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
Real Author must be a Tamil Speaking Non Muslim because Muslim never say Prophet's name without Sallallahu Alihi wasallam
ReplyDeleteஸர்மிலா போன்ற முட்போக்கு சிந்தனை கொண்டவர்கள்., முட்போக்கு சிந்தனை கல்விவுட்டப் பட்டுல்லார்களே ஓலிய அடிப்படை கல்வி என்தன் பக்கம் அரை குரையாய் இருப்பதே காரணம். அடிப்படை மற்றும் நடு நிலை கண்னேட்டம் இல்லாததுமே காரணம்.ஸர்மிலா போன்ரவர்கள் இலங்கையில் தோன்றும் இன்னுமொறு தஸ்லிமா நஸ்ரினாகவும். இருக்கலாம்.இஸ்லாத்தை அதன் முரைப்படி புரிந்துக் கொண்டால் முட்போக்கு என்டால் என்ன அடிப்படை என்டால் என்ன என்பதனை தெரிந்துக் கொல்லலாம்,
ReplyDeletewho is this sharmila?what is fundamentalism?what is talking about ,she may feel difficult to answer some questions raised from no Muslims as not aware of Islam but a Muslim has answers for all such questions.
ReplyDeletethis lady has learn islam,
Definition of the word ‘fundamentalist’A fundamentalist is a person who follows and adheres to the fundamentals ofthe doctrine or theory he is following. For a person to be a good doctor, heshould know, follow, and practise the fundamentals of medicine. In other words,he should be a fundamentalist in the field of medicine. For a person to be agood mathematician, he should know, follow and practise the fundamentals ofmathematics. He should be a fundamentalist in the field of mathematics. For aperson to be a good scientist, he should know, follow and practise thefundamentals of science. He should be a fundamentalist in the field of science.2. Not all ‘fundamentalists’ are the sameOne cannot paint all fundamentalists with the same brush. One cannotcategorize all fundamentalists as either good or bad. Such a categorization ofany fundamentalist will depend upon the field or activity in which he is afundamentalist. A fundamentalist robber or thief causes harm to society and istherefore undesirable. A fundamentalist doctor, on the other hand, benefitssociety and earns much respect.3. I am proud to be a Muslim funda-mentalistI am a fundamentalist Muslim who, by the grace of Allah, knows, follows andstrives to practise the fundamentals of Islam. A true Muslim does not shy awayfrom being a fundamentalist. I am proud to be a fundamentalist Muslimbecause, I know that the fundamentals of Islam are beneficial to humanity andthe whole world. (Dr.Zakir Naik)
if jaffnamulim can give her detail please tell us we are ready to teach her what is fundamentalism.
don't publish like this articles . this is my kind request to editor of jaffna muslim
ReplyDeleteஇந்த ஆக்கத்தை எழுதியவருக்கு இஸ்லாம் குறித்து போதிய அளவு அறிவு இல்லாமையை ஆக்கம் சுட்டிக்காட்டுகிறது.
இது போன்ற ஆக்கங்களை பிரசுரிப்பது jaffna muslim இனது தரத்தை நிச்சயம் குறைக்கும்.
சிறகு முளைத்த பெண், முன்னர் முஸ்லிம் சமூகத்திடம் கேட்ட மன்னிப்பு போலியானது என்று நன்கு தெரிகிறது.
ReplyDeleteஇதனால், அவருக்கு முஸ்லிம் தளங்களில் தலைகாட்ட முடியவில்லை. இப்போது முஸ்லிம் விரோத தளங்களில் நின்று பீற்றிக் கொண்டிருக்கிறார். இந்தப் பீற்றல் எல்லாம் முஸ்லிம் விரோத தளங்களில் மட்டும் நிற்பதால் என்ன பயன்?
ஷர்மிளா உம்மா, உங்களின் பிபிசிக்காரி ஆட்டம் போட்டுக்கொண்டு, உங்களிடம் செவ்வி எடுக்க இன்னும் வரவில்லையோ! இன்னும் கொஞ்சம் famous ஆகலாமே.
கொஞ்சம் விட்டுப் பார்த்தால் துள்ளுகிறீர்களே? விபச்சாரத்தை சட்ட அங்கீகாரம் செய்யப்படவேண்டுமென்று ஒற்றைக்காலில் துள்ளியது சரிபட்டு வரவில்லையா?
நமது சகோதரர்கள், எப்போதோ உடைத்துப் போட்ட தங்களது சிறகை மீண்டும் உடைக்கப் போகிறார்கள்.
நீங்கள் எழுதிய கிறுக்கல்களைக் கொஞ்சம் மீண்டும் படித்துப் பாருங்கள். சிறுபிள்ளைகள் இதைவிட நன்கு கிறுக்கும், மண்ணில் விளையாடும்போது.
ரிசானாவின் விடயங்களை நமது ஈமானிய உள்ளங்கள் பார்த்துக்கொள்ளும்.
குசினியில் கொஞ்சம் வேலை இருக்கிறது. முதலில் நீங்கள் அதைக் கழுவித் துப்பரவு செய்யுங்கள்.
Please jaffnamuslim d
ReplyDeletedo not publish any article of Sharmila Seyyed as she is controversial lady without Iman.
intha katturayai eluthiyawal oru munafikkaha irukkalam allathu islaththai patri theriyathawalaha irukkalalam, engal kanmani Rasool Sallallahwain peyarai mathiram kurippuduhiral ithu awalathu ariweenaththai eduththu kattuhirathu,, evallellam oru eluththalara,,, thawba seythu muslimaha wala parungal
ReplyDeleteநண்பர்களே.....
ReplyDeleteநன்றாக வாசியுங்கள்.... இந்தக் கட்டுரை நிச்சயமாக ஒரு முஸ்லிமால் எழுதி இருக்க முடியாது என்பதை அறிய முடியும்.
ஏனெனில், இக்கட்டுரையில் எமது உயிருளும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் பெயரின் பின்னால் எங்கேயும் சலவாத் எழுதப்படவில்லை.
உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இந்த கட்டுரை பற்றி பதிய பட்டுள்ள கருத்துக்களையும் சற்று கவனத்தில் எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteNichchayamaaha ithu oru muslimaal eluthappatta katturai alla.ithu yaaro kaalpunarchiyil kuruttu vivaatham seithirukiraarhal.
ReplyDeleteUngal Karuththu Sari Endru Ninaithukondirukkreehala? Allah Paazuhakkawendum
ReplyDeleteHi Friends,
ReplyDeleteஒரு பெண்ணால் எழுதப்பட்டுள்ள ஓர் ஆண்மை மிகுந்த கருத்துரை இது! Well done Sharmila.
நீங்கள் ஒரு பெண் என்பதாலும் மனதுக்குச் சரி என்று பட்டதை துணிச்சலாக எழுதியிருப்பதாலும் நமது சமூகத்திலுள்ள சிந்திக்க மறுப்பவர்களும் மட்டமான எண்ணம் கொண்டவர்களும் இதற்காக உங்கள் மீது சேற்றை வாரி வீசக்கூடும். ஆனால் அதையும் மீறி உங்கள் கருத்துகளிலுள்ள அறம் நிச்சயம் பலரை சரியான பாதையிலே சிந்திக்க ஊக்குவிக்கும் என்பது எனது நம்பிக்கை.
இந்தக்கட்டுரையை மறுபிரசுரம் செய்தமைக்காக இந்த இணையத்தளத்தின் நடாத்துனர்களைப் பாராட்டுகின்றேன்.
ஆன்மீகம் / மதம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எனும் கருத்தை வலியுறுத்துகின்றதையே ஒரே நோக்கமாகக் கொண்டு எழுதியும் செயற்பட்டும் வருகின்றவர்கள் இதுபோன்ற கருத்துரைகளைப்பற்றிச் சிந்திக்கவேண்டும்.
இப்படிச் சொல்வது ஒரு குறித்த மதத்தின் மீது அவதூறு சொல்வதாகாது.
எந்தவொரு மதமும் மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாகத்தான் இருக்கும் - இருக்கவும் வேண்டும். மாறாக சிறு தவறுகளுக்கெல்லாம் வெட்டு, கொத்து என்று இருந்தால் அதுவும் இன்றைய நாகரீக உலகின் போக்குகளையெல்லாம் உதாசீனம் புரிந்துவிட்டு வன்முறைக்கிளர்ச்சிகளையே தனது இருப்புக்கான வழிமுறையாக கைக்கொண்டால் அது நிச்சயம் சரியாக இருக்காது. அல்லது அது திரிபுபட்ட கருத்துச்செருகல்களுக்கு ஆட்பட்டதாகத்தானிருக்க வேண்டும்.
இவற்றைப்பற்றியெல்லாம் தர்க்க ரீதியாச் சிந்திப்பதற்கும் மறுபரிசீலனை புரிவதற்கும் நமது சமூகத்தில் சுதந்திரமான சூழல் நிலவவேண்டும்.
அதைவிடுத்து, "புனிதமான ஒன்றின் மீது விமர்சனம் வைக்கின்றாயா? இதோ வருகின்றேன் உன்னைக் கொல்லுவதற்கு!" என்று கொலைவெறியுடன் கிளம்புவது என்பது எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் அறிவுடமையாகாது.
உதாரணமாக, நாம் வெளியில் செல்லும்போது ஒருவர் நம்மைப்பார்த்து, 'உன் முகத்தில கரி போல ஏதோ கறுப்பாகப் பட்டிருக்கு துடை' என்று சொன்னால் அதைக் கண்ணாடியில் பார்த்து உறுதிசெய்து கரி கறுப்பு இருந்தால் அதை துடைத்துக்கொண்டு போகின்றவன்தான் விவேகமான மனிதனாக இருக்க முடியும்.
மாறாக, 'கரி பட்டிருக்குது' என்று சொன்னவனை மூர்க்கத்துடன் அடிக்கப்போகின்றவன் எப்படியானவனாக இருக்கமுடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அவன் ஒரு முழுமுட்டாளகவோ அல்லது மனப்பிறழ்வு கொண்டவனாகவோதான் இருக்க முடியுமல்லவா?
இவ்வாறான முழு முட்டாள்களைப்போன்று அல்லது மனப்பிறழ்வு கொண்டவர்களைப்போன்று நாம்/ நம்மில் பெரும்பான்மையானவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதால்தான் இன்றைக்கு வெளியுலகத்தில் முஸ்லிம்கள் என்றால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், அமைதியாகப் போராடாமல் எடுத்தவுடனே வன்முறையில் இறங்கும் காட்டுமிராண்டிகள் என்ற கெட்ட பெயரே ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஸலாம்..
ReplyDeleteஇவருக்கு இன்னும் சரியாக மதங்கள் என்ன மற்றும் அவைகளின் தனித்துவம் என்ன என்பது சரியாக புரிந்துக்கொள்கின்ற அறிவில்லை அதன் காரணமாகத்தான் இப்படி கருத்து சுகந்திரமென்று உளருகிறார்.
கருத்து சுகந்திரம் என்றால் அது பக்கசார்ப்பாக இருக்ககூடாது, அடுத்தவரை தாக்ககூடியதாக இருக்ககூடாது, ஏதோ ஓர் சில தன் சுயலாவத்துக்காக அதை பயண்படுத்தவும் கூடாது.
இவருக்கு பேனா பிடிக்க மட்டும் தெறிந்ததால் கருத்துச்சுதந்திரமென்ற ஒன்றை முறைகேடாக பயன்டுத்துகிறாரே தவிர சரியான ஆதாரங்களுடன் பக்கசார்பின்றி எதையும் முன்வைக்க தெரியாதவர். இவர் சொல்கிர கருத்துசுதந்திரத்திற்க்கு இவரே முரண்பட்டு போவதை இந்த கட்டுரையை சரியாக சிந்தித்து படிக்கும் ஒவ்வொருவருக்கும் விலங்கிக்கொள்ளலாம்.
1- இப்போது முஸ்லீங்கள் ஜனநாயகமற்ற முரையில் படத்துக்கு எதிராக நடக்கிறார்கள். இது உண்மையிலே சரியான பார்வையா? பக்கசார்ப்பான பார்வையா? இதற்க்கு முன் இந்தியாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் படங்கலை தடை செய்ய வில்லையா? தடை செய்ய ஜனநாயகரீதியாக ஏட்பாடுகள் செய்ய முன் அவர்கள் செய்த ஆர்பாட்டங்கள் எத்தனை, எத்தனை கடைகள் நொருக்கப்பட்டன, எத்தனை தியட்டர்கள் உடைக்கப்பட்டன, சொல்ல முடியாதலவுக்கு நஸ்டங்களை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஏட்படுத்தினார்கள். (பாபா படத்தையொட்டி நடந்த ஆர்பாடத்தை பார்கவிள்லையா?), (டாம்999 படத்தை தடைசெய்தது தெரியாதா?), பயர் படத்துக்கு பெண்களும் ஈடு பாட்ட ஆர்பாடங்களை பார்க்கவில்லையா?), தமிழ் - இந்தி - மளயாலம் - தெளுங்கு இப்படி பல மொழி எத்தனையோ பட தடைகளும், ஆர்பாட்டங்களும், சூரையாடலும் இந்தியாவில் நடந்தேரியுள்ளன இவைகளை விட மிகவும் சரியான அலகான ஜனநாயக முறைப்படி நடத்திய இந்த தடை மட்டும் தான் இவருக்கு விலங்கியதோ?
முஸ்லீங்கள் எந்த தியட்டர்களை உடைத்தார்கள்?, எந்த பாதையை முடக்கினார்கள்?, எவர்களுக்கு கள் வீச்சு நடத்தினார்கள்?, அரசாங்கத்திற்க்கு எவ்வளவு நஸ்டம் இவர்களால் ஏட்பட்டது?.......
2- உலமாக்களுக்கு சினிமா பார்க்க முடியுமா என்பதை மொட்டையாக சித்தரித்து நளுவுகிரார்... கருத்தெழுத தெரிந்த இவருக்கு உலமாக்களின் கருத்தை புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்களே சொள்கிரார்கள் ஏன் நாம் இப்படத்தை பார்தோம் என்று. சர்ச்சைக்குறி நிகழ்வொன்று ஏட்படும் போது அதை சரியான ஜனநாயக ரீதியாகவும் முறையான கருத்துப்பரிமாற்றங்கல் மூலமாகவும் அனுகிய பிறகு தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்தடிப்படை கூட தெரியாமல் கட்டுரை என்ற பெயரில் ஏதோ ஒரு உள்நோக்கோடு பொய்களை மக்கள் மத்தியில் விதைக்கப் பார்கிரார். கமல் என்ற நடிகரின் வேண்டுகோலுக்கினங்க. அதை ஒரு முரை பார்த்து விட்டு உங்கள் நியாயங்களை சொல்லுகள் என்று சொன்ன பிரகு தான் அப்படத்தை பார்தார்கள். உலக நாடுகளில் போதை போருல் கடத்தியவர்களுக்கு மரன தன்டனை (து“க்கிலிட்டால்) உடனே நீங்கள் சொல்வீர்களா தன்டனை கொடுத்தவன் ஒரு கொலையாளி என்று? பொது நலனுக்காக ஒரு தடுக்கப்பட்டதை ஆராய்வது தவரிள்ளை. எதயும் சரியாக தெரிந்து பேசுவது தான் சிறந்த பன்பாடு.
to be continued.....
3- 1999 ல் குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்துல்லா ஒச்சலானுக்கு மரணதண்டனை விதித்து, 2001ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மரண தண்டனையை முற்றிலும் கைவிட்டது. ஆனால் ரிஸானா றபீக் சிறுமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை?... இவரின் மற்றுமோர் அரியாமையை பாருங்கள். துருக்கி நாடு சவூதி அரேபியா போன்று முஸ்லீம் நாடுமல்ல, ஷரீஆ சடமும் அங்கில்லை. எப்படி சவூதி சட்டத்தை அதுபோன்றில்லாத சட்டத்தோடு ஒப்பிட்டு கைவிலையாடுகிரார்.
ReplyDelete4- மனுஷ்யபுத்திரனுக்கு மிருகபுத்திரன் பட்டமளித்து அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஏன் உங்களைப்போன்றவர்கள் சுவரொட்டிகளை பற்றி வாய் திரக்கவே கூடாது. உங்களுக்கு இருக்கும் அதே கருத்துரிமை கொண்டு இதையும் பார்க வேண்டியது தானே. உங்களுக்கு கருத்துரிமை சட்டம் எங்களுக்கு இது இல்லையா? இதில் மற்றொரு வேடிக்கை என்ன வென்றால். நக்கீரன் இதழ், கருணாநிதி மற்றும் சில இதழ்களுக்குறியவர்களுடன் றிஸானாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை மிகக் கொடுமையானதா? மிகச்சராயானதா? என்ற விவாதத்துக்கும் அலைத்துத் தான் அந்த போஸ்டர்கள் உள்ளன, ஆனால் அதையெல்லாம் மரைத்து குறை கூருகிரார். எப்படிப்பட்ட கை இது? சிந்தியுங்கள்? கருத்துரிமை என்று ஆதாரங்களில்லாமல் இவர்கள் வைக்கும் கருத்தை தகுந்த ஆதாரங்களுடின் நாம் விவாத மேடையில் பார்ப்போம் என்ரு அழகிய முரையில் கருத்தைக்கொண்டு போஸ்டரகள் அடித்தால் அது அசிங்கம். ஆனால் அதை அவர்கள் செய்தால் தனி மனித கருத்துரிமையாம். நல்ல ஞாயம்..... இவர் சரியான கருத்துரிமையில் இருந்தால் அலைத்து வரவேண்டியது தானே விவாத மேடைக்கு. அல்லது அவர்கள் நாம் தான் சரியான கருத்துரிமையை பேனுகிறோமென்றால் இந்த கருத்தை கருத்தைக்கொண்டு தெளிவு படுத்தவேண்டியது தானே. கருத்து கலத்துக்கும் வரமாட்டார்கள், உருப்படியான சரியான ஆதாரங்கள் கொண்டும் கருத்து பறிமாற்றங்கள் செய்யவும் மாட்டார்கள்.
எனவே, உண்மைகளை இருட்டடிப்பு செய்து தன் சுயலாபதுக்கு ஏற்ற விதத்தில் திருத்தி முஸ்லீம் சமுதாயத்தையும் ஏமாற்ற துனிந்தவர்கள் தான் இப்படிபட்ட கட்டுரைகளை வெளியிடுகின்றன. கவனம்..... கவனம்....
அல்லாஹ் போதுமானவன்!
அனைத்தையும் அறிந்தவன்!
வஸ்ஸலாம்
அருமையான கட்டுரை
ReplyDeleteRasool sallallah alaihivasallam should b given due respect adressing him just mohamed not good enough.
ReplyDeleteSister Sharmila lacks proper grasp of Islamic historical perspective of recent developments.
தயவு செய்து இஸ்லாத்தை நன்றாக படித்து விட்டு பூரண அறிவுடனும் ஈமானுடனும் எழுதத் தொடங்குங்கள் கட்டுரையாளரே....
ReplyDeleteமுஹம்மது நபி (ஸல்) அவர்களை "முஹம்மது" என்று நீங்கள் எழுதியது மிகவும் கவலை அளிக்கிறது....
நீங்கள் கூறும் எந்த ஒரு கருத்தும் ஏற்றுக் கொள்லும் படியாக தெரியவில்லை...!
ஏதோ மார்க்கம் தெரிந்தது போல் புரியாமல் பேசுகிறார் சகோதரி சர்மிளா. இன்று அணைத்து துறைகளிலும் தாக்கத்தை செலுத்துகின்ற ஊடகத்துறை இந்த சினிமா அவ்வாறு இருக்க தாக்கம் செலுத்தாதென்று எவ்வாறு கூற முடியும். திரைப்படத்தை உலமாக்கள் புத்திஜீவிகளை எவ்வாறு திரைப்படம் பார்ப்பது? என்று கேள்வி வேறு. ஒரு விடயத்துக்கு தீர்வு காண வேண்டுமானால் அந்த விடயத்தை ஆராய வேண்டும். ஆராய்வதற்காக பார்கபட்டதே தவிர பொழுது போக்குகாக அல்ல. என்பதை விளங்க வேண்டும். உலகுக்கு தன்னை அறிமுகப்படுத்த எத்தனையோ வழிகள் உண்டு அதை விட்டுவிட்டு இவ்வாறாக கீழ் தனமான செய்திகளை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
ReplyDeleteஏட்கனவே ஒன்று கிறுக்கு தனமா பேசிட்டு இருக்கு அதுக்கு இன்னொன்னு குட வேற பிடிக்குது (ஸர்மிலா, jesslya jessly)
ReplyDeleteஒரு விசயத்தை தெரிஞ்சிகங்க jesslya jessly ??
ஒரு விவசாயி, தன் சொந்த நிலம், தன் சொந்த உழைப்பு என்பதற்காக கஞ்சா பயிரிட சிறப்புரிமை கோர முடியாது. கலை (சினிமா) என்பதும் ஓர் உற்பத்திப் பொருளே. அது சமூகத்துடன் வினைபுரிவதால் விளைவுகள் உண்டாகும் என்னும்போது எப்படி தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்க முடியும்?
மேலும் நீங்கள் மேலே உதாரணத்தில் சொன்னது போன்று உண்மைலே கரிபட்டு இருந்தால் முகத்தை துடைத்துக்கொண்டு போகலாம் ஆனால் முகத்தில் கறியே இல்லாதிருந்தாழ் என்ன செய்வது எண்டு சொல்லலையே சகோதறி ??
// 'இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்' என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?' என்றார் நண்பர். //
ReplyDeleteவன்முறை ஒன்னும் இல்லாமல்...முறையாக கோர்ட் போய் படத்தை தடுத்து நிறுத்தியது ஜனநாயகம் இல்லாமல் வேற என்ன.....
......
இவ சுய நினைவோடதன் எழுதினவா..?
சகோதரியின் கருத்திலும் நியாயம் உள்ளது எமது உயிரிலும் மேலான இஸ்லாத்தை நாம் வெறியோடு பார்க்கின்றோம் என்று பிறர் நம்மை பார்த்து பிழையாக நினைக்க கூடாது.
ReplyDeleteSharmila, Jesslya "ETHTHAKULLAH" Allahwai Payandu Kollungal.
ReplyDeleteMr. MCA Fareed, how u say that this is good Article? Please study Islam.
To Jesslya Jessly,
ReplyDeleteஸலாம......
உங்களுக்கும் புத்தி எங்கே போனது! பதில்கள் என்ற பெயரில் ஏதாவதை உளரிக்கொடிவிடுவதா? ஒருவன் என் முன்னால் வந்து உன் முகத்தில் கருப்பாக ஏதோ பட்டிரிக்கிறது என்று சொன்னால் அதை கண்ணாடி முன்னால் சென்று பார்த்து நீக்கிவிடுவோம். ஆனால் அவன் என் முகத்துக்கு கரி பு,ச வந்தால் அதை பார்த்து சும்மா நிக்கமாட்டோம். அப்படி இருந்தால் அவன் கோழை. அனேகமான கோழைகள் தான் வெறுமனே பேனாவை பிடித்தவன்னம் இன்றும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூக நலனுக்காவது முன்நின்று போராட மாடார்கள்.
உண்மையான கருத்துக்களைச் சொல்ல வழியுண்டா? கருத்து சுதந்திரம் உண்டா?:
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சங்பரிவாரக்கும்பல் தலைவன் கோட்சேவின் உண்மை வாழக்கைவரலாறை படம் எடுப்போமா?
குஜராத்தில் நரவேட்டையாடிய நரபலி மோடியின் நரவேட்டையை படமாக எடுத்தால் அங்கீகரிக்குமா சங்பரிவாரக்கும்பல்?
மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டுவெடிப்புகளை படமாக்கினால் பாராட்டு விழாநடத்துவார்களா இந்த பரிவாரக் கூட்டங்கள்?
அரசியல்வதிகளின் உண்மை முகங்களை வெட்டவெளிச்சமாக்கி படம் எடுத்தால் விட்டுவைக்குமா இந்த அயோக்கிய கும்பல்?
மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் இல்லையென்று பதில் வந்தால் பிறகெங்கே உள்ளது உங்கள் கருத்து சுதந்திரம்? எல்லாம் பொய் வேசம்.
மேற்கூறியவைகள் எல்லாம் உண்மைகள். அந்த உண்மைகளைச் சொன்னால் அதுகூடாது என்று கருத்துச் சொல்லும் இந்தக்கூட்டம் பொய்யான முறையில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து படம் எடுப்பதைக் கண்டித்தால் காட்டுக்கூச்சல் போடுவார்களோ?
இஸ்லாம் சொல்லும் கருத்து சுதந்திரம்:
பேசினால் நல்லதையே பேசுங்கள்; இல்லாவிட்டால் வாய்மூடி இருங்கள். இதுதான் இஸ்லாம் எங்களுக்குக் கற்றுத்தந்த கருத்து சுதந்திரம்.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையைமறைக்கவும் செய்யாதீர்கள். இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் கருத்து சுதந்திரம்.
இனியாவது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெட்டிச் சித்தாந்தம் பேசாமல்,உண்மையான, நேர்மையான, சரியான கருத்துக்களைச் சொல்ல வழிவிட்டு கருத்துசுதந்திரத்தைப் பேண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையைமறைக்காதீர்கள்!
அல்குர் ஆன்: Chapter 2: Verse42
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப்பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி e :6018
இந்த சஹோடரின் கருத்துகள் வரவேற்க்கதக்கது ஆனாலும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரை குறிப்பிடும் போது பெரும் மரியாதை கொடுத்து எழுதப்பட வேண்டும்.
ReplyDeleteஇந்த விச்பருபம் படம் கபீர்களினால் தயார் செய்யப்பட்டது இனி அவர்கள் பார்க்கட்டும்,நாங்கள் முஸ்லிம்கள் பார்க்க கூடாது அது ஹரம்.அவர்கள் படத்தை தனது தொழில் தேவைக்காக செய்ரங்கள்.உலகத்தில் எத்தனயோ படங்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கின்றன அவைகள் பார்த்து மனிதர்கள் உடனே மாறிவிட்டார்களா?
ஈமானை பலப்படுத்துங்கள் சகோதரியே...
ReplyDelete//
ReplyDelete@ Sindhu Bindhu :
இந்த சஹோடரின் கருத்துகள் வரவேற்க்கதக்கது ஆனாலும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரை குறிப்பிடும் போது பெரும் மரியாதை கொடுத்து எழுதப்பட வேண்டும்.
இந்த விச்பருபம் படம் கபீர்களினால் தயார் செய்யப்பட்டது இனி அவர்கள் பார்க்கட்டும்,நாங்கள் முஸ்லிம்கள் பார்க்க கூடாது அது ஹரம்.அவர்கள் படத்தை தனது தொழில் தேவைக்காக செய்ரங்கள்.உலகத்தில் எத்தனயோ படங்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கின்றன அவைகள் பார்த்து மனிதர்கள் உடனே மாறிவிட்டார்களா?
//
நீங்கள் என்ன சொல்லவாறீர்கள்...
பிரச்சினையே.. காபீர்,முஸ்லிம் அல்ல..... முஸ்லிம்களை பற்றி பொய்யான விசயங்களை உட்படுத்தி படம் எடுத்ததுதான்....
.. Sindhu Bindhu அவர்களே.. உங்களை பற்றி /உங்கள் அம்மா பற்றி பொய்யான விடயங்களை ஒருவன் கூறி திரிகிறான் என்றால் என்ன செய்வீர்கள்...
நீங்கள் முஸ்லிம் என்றால்...இந்த படம் உங்களை (முஸ்லிம்) பற்றி பொய்யான விடயங்களை கொண்ட படம்....
ஸர்மில.jasliya jasly இன்று முட்போக்கு சிந்தனையிலே முதன்மையான மேற்கத்திய நாடுகளிலே மிக வேகமமாக அபார வலர்ச்சி கண்டுவரும் சிந்தனையே, உங்கள் போண்றவர்களின் சிந்தனையில் உல்ல அடிப்படைசிந்தனையான இஸ்லாமிய சிந்தனையாகும். நீங்கள் இருவறம் மற்றும் பரீட் போண்ரவர்கலும் இன்னும் வலரவேண்டும். தடி எடுத்தவன் எல்லாம் வேட்டை காரனாக முடியாது அல்லவா.
ReplyDeleteMr Haazi!
ReplyDeleteThere are all over the world thousands of islamic and muslims against the film.I also watch those films so its mean myself consider is it right or not.
Well educated peoples its take it eassy.........uneducated peoples never understand nothing.
தாலிபான்கள் தீவிரவாதிகளா? மண்ணின் போராளிகளா?
ReplyDeleteயுவான் ரிட்லி (Yvonne Ridley) என்கிற செய்தி சேகரிப்பாளர் தாலிபான்கள் கூட இருந்து தாலிபான்களின் உண்மை சித்திரத்தை உலகுக்கு சொன்னவர். தாலிபான்களின் ஒழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றவர்.
இனி யுவான் ரிட்லி சொல்வதை பாருங்கள்.
"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டியிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.
இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...
சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...
தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,
"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..
என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?
இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் போதுமாம்.
3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
ReplyDelete