Header Ads



A/L பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை மஹிந்த பாராட்டினார் (படங்கள்)



2012 க.பொ.த உயர்தரப்பரீட்சையில் இலங்கையிலேயே அதிக புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவ மாணவியர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துரையாடினர்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது  விஞ்ஞானம், கணிதம் ,வர்த்தகம், கலை மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களில் அகில இலங்கையிலேயே ஆகக்கூடிய புள்ளிகளைப்யைப் பெற்ற முதலாம், இரண்டாம் ,மூன்றாம் உட்பட சுமார் 15 மாணவ மாணவிகள் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.

அதி கூடிய புள்ளிகளைப்பெற்ற இந்த மாணவ மாணவிகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெகுவாகப் பாராட்டியதுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். ஜனாதிபதி இவர்களுக்கு மடிக்கணனிகளை வழங்கி கௌரவித்தார்.

தேசிய சேமிப்பு வங்கித்தலைவர் சுனில் எஸ் சிறிசேன  மாணவ மாணவியருக்கு நான்கு வருட உயர்கல்வியைத் தொடருவதற்கான கல்விப்புலமைபரிசில்களை வழங்கினார்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலணித்தலைவர் காமினி செனரத், வங்கித்தலைவர் சுனில். எஸ். சிறிசேன ,குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள். ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 









2 comments:

  1. Congratulations all dear students!

    ReplyDelete
  2. என்ன எல்லாரும் சிங்கள அவர்களோ ! அதனால்தான் சிங்கள காடையர்கள் சத்தமில்லாமல் இருக்கிறார்கள். இது என்ன வென்று சொல்வது!

    ReplyDelete

Powered by Blogger.