நிந்தவூரில் 65 வது சுதந்திர தின கொண்டாட்டமும், சிரமதானப்பணியும்
(சுலைமான் றாபி)
இலங்கையின் 65 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் AM அச்சி முஹம்மது அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரும் எதிர்கட்சித்தலைவருமான YL சுலைமா லெப்பே அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பாடசாலை மாணவிகளால் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் இளைஞர் சேவை அதிகாரி MTM ஹாரூன், கிராம சேவை உத்தியோகத்தர் AM பலூலுல்லாஹ், பாடசாலை ஆசிரியர்களான MIM ஹிதாயத்துல்லாஹ் மௌலவி, MS கபீர், நெஸ்கோ இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் நெஸ்கோ இளைஞர் கழகதினரால் மாபெரும் சிரமதானப்பணியும் இப்பாடசாலையில் இடம்பெற்றது.
Post a Comment