Header Ads



சுபீட்சமான தாய் நாடு - ஒளிமயமான நாளைய தினம்' - 65வது தேசிய சுதந்திர தின நிகழ்வு


''சுபீட்சமான தாய் நாடு - ஒளிமயமான நாளைய தினம்” என்ற தொனிப் பொருளில் இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தினம் திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையோரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது.

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் மிகப் பிரமாண்ட மான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நகர் முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தின உரையை நிகழ்த்துவார். ஜனாதிபதியின் 30 நிமிட நேர உரையைத் தொடர்ந்து மரியாதை அணிவகுப்பு ஆரம்பமாகும்.

தேசத்தின் சுத்தந்திரத்திற்காக போராடிய முன்னோர்கள் மற்றும் படை வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து 9.11க்கு ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 மரியாதை பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படும்.

No comments

Powered by Blogger.