Header Ads



6 நாட்களாக பதுங்கு குழிக்குள் பணயக் கைதியாக தவித்த சிறுவன் உயிருடன் மீட்பு



அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் மிட்லண்ட் என்கிற சிறு நகரத்தில் 5 வயது சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம நபரால் கடத்தப்பட்டான். பள்ளிப் பேருந்தில் ஏறிய மர்ம நபர், ஓட்டுனர் சார்லஸ் ஆல்பர்ட் பொலண்ட்  ஜூனியரை மிரட்டியுள்ளான். அதற்கு பணியாததால் அந்த மர்ம நபர் ஓட்டுனரைச் சுட்டுக் கொன்றுள்ளான். பிறகு அந்த பேருந்தில் இருந்த 5 வயது சிறுவனை பணயக் கைதியாக பிடித்துச் சென்றான். அந்த நபர் சிறுவனை தனது நிலத்தில் சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பதுங்கு குழிக்கு தூக்கிச்சென்று மறைந்து கொண்டான்.

கடத்தி செல்லப்பட்ட சிறுவன் பெயர் ஈதன். அவனது சகோதரனுடன் அந்தப் பள்ளிப் பேருந்தில் இருந்துள்ளான்.   சிறுவன் ஈதன் மனவளர்ச்சி குன்றியவன் என்பதும் பின்னர் தெரிய வந்தது. அந்த மர்ப நபர் ஜிம்மி லீ டைக்ஸ் (65) என்பது பின்னர் தெரிய வந்தது. இவர் அமெரிக்க கப்பற்படையில் 1964-லிருந்து 1969 வரை பணியாற்றியவன்.

கடந்த 6 நாட்களாக அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே அதிகாரிகள் அமெரிக்க நேரப்படி மாலை 3:12 மணிக்கு பதுங்கு குழிக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது கடத்தல்காரன் துப்பாக்கியை சிறுவன் மீது வைத்து மிரட்டியுள்ளான். சிறுவனுக்கு ஆபத்து நிகழலாம் என்கிற சூழ்நிலையில், அதிகாரிகள்  கடத்தல் காரனை கொன்று சிறுவனை உயிருடன் மீட்டனர்.

மனவளர்ச்சி குன்றிய 5 வயது சிறுவன் ஈதனை உயிருடன் கண்ட, அவனது அம்மா மகிழ்ச்சிப் பெருக்கில் அவனை இறுகத் தழுவிக் கொண்டார்.

No comments

Powered by Blogger.