மகாவலி கங்கையில் நீராடிய 5 இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு
(கம்பளையிலிருந்து மொஹமட் ரம்ஸீன்)
சிவனொலிபாத மலைக்கு யாத்திரை சென்ற இளைஞர்கள் குழுவினர் இன்று 22.02.2013 பிற்பகல் நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த போது ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கம்பளை வட்டதெனிய பகுதியில் இருந்து வேனனொன்றில் சிவனொலிபாத மலைக்கு யாத்திரை சென்ற இக்குழுவினர் நாவலப்பிட்ட அட்டன் வீதியில் வெலிகம்பொல எனும் இடத்தில் நீராடியுள்ளனர். இதன் போது இரு இளைஞர்கள் நீரில் ஆழமான பகுதிக்கு சென்று நீராட முற்பட்ட போது அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களைக் காப்பாற்ற முயற்சித்த ஏனைய மூன்று இளைஞர்களும் முயற்சி பலனின்றி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர்களுள் வேனின் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இவர்களின் சடலங்கள் யாவும் தற்போது நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரனைகளும் இடம்பெற்று வருகின்றன.
Innaalillahi wainnailaraajuhoon. We know Haj pilgrims but this..?
ReplyDelete