Header Ads



அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல் - 5 ஆயிரம் விமான சேவைகள் ரத்து



வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ், கொனெக்டிக்ட் ஆகிய மாநிலங்களில் நேற்றிலிருந்து கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால், சாலைகளில் ஒரு மணி நேரத்தில் 1/2 அடி உயரத்துக்கு பனி உறைந்ததால், பல இடங்களில் 3 அடி உயரத்திற்கு பனி படிந்தது காணப்படுகிறது. 

நியூயார்க் நகரிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து கடுமையான பனி கொட்டியதால், மின் கம்பங்களின் மீது மரங்கள் சாய்ந்ததில் மாசாசூசெட்ஸ், கொனெக்டிக்ட் மாநிலங்களில் உள்ள சுமார் 7 லட்சம் வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

கடும் குளிரை தாங்க முடியாமலும பனியில் சறுக்கிச் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளானதாலும் இது வரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் உள்ள பனிக்கட்டிகளை சுரண்டி அகற்றும் பனியில் ஈடுபட்டுள்ள வாகனங்களும் உறைபனியில் சிக்கிக் கொண்டுள்ளன. 

கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.