இந்தியாவின் 5000 தொன் டீசலை திருப்பியனுப்பிய இலங்கை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 ஆயிரம் மெட்றிக் தொன் டீசலை தரம் குறைவாக இருப்பதாகக் கூறி இலங்கை அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையின் பின்னால், அரசியல் காரணங்கள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் சந்தேகம் கிளம்பியுள்ளன.
இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி.யிடமிருந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த 5 ஆயிரம் மெட்றிக் தொன் டீசல் தரம் குறைந்தது என்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் சிறிலங்கா கிளைத் தலைவர் சுபோத் தக்வாலே கூறுகையில்,
5 ஆயிரம் தொன் தரமான டீசலை கப்பல் மூலம் சிங்கப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,டீசலின் மாதிரியை சோதனை செய்து பார்த்ததாகவும், அதில் டீசலின் தரம் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளது. இதையடுத்து ஐஓசி அனுப்பி வைத்துள்ள 5 ஆயிரம் தொன் டீசலை திருப்பி அனுப்பியுள்ளது.” என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசின் இந்த முடிவு உண்மையில் டீசல் தரம் குறைந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா, அல்லது அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Post a Comment