சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு - 42 பேர் மரணம் 237 பேர் காயம்
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஆளும் பாத் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் அல்இமன் மசூதி அருகில் 21-02-2013 காரில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.
அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து ரத்து செயய்ப்பட்டது. துப்பாக்கி சத்தமும் கேட்டது. குண்டு வெடித்த இடத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இத்தாக்குதலில் குழந்தைகள் உள்பட 42 பேர் கொல்லப்பட்டனர். 237 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரகத்தின் ஜன்னல்கள் சேதமடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தற்கொலைப் படை தாக்குதல் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இத்தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் இரண்டு வாதிகள் டமாஸ்கஸ் ராணுவ தலைமையகம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உயிரிழப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
Post a Comment