பாகிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் - 35 பேர் மரணம்
பாகிஸ்தானில் இன்று தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதல் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே நடத்தப்பட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தெரிவித்துள்ளார்.
வட மேற்கு பாகிஸ்தானில் வர்ஜிஸ்தான் பகுதியில் பாக்., படையினர் இருந்த சோதனைச்சாவடியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டையும் நடந்தது. இதில் 12 தலிபான்களும், பாக்., படையினர் 8 பேரும் மற்றும் பொதுமக்கள் 11 பேரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தலிபான் தற்கொலை படையினர் 3 பேர் இறந்தனர்.
பழி தீர்க்கவே தாக்குதல் :
4 மணி நேரம் தொடர்ந்து இந்த சண்டை நீடித்தது. தொடர்ந்து சாவடி அருகே இருந்த ஒரு வீட்டின் மீதும் ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து தலிபான் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது; இந்த தாக்குதலுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். சமீபத்திய அமெரிக்க ராணுவ தாக்குதலில் தலிபான் கமாண்டர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதில் அமெரிக்காவுக்கு பாக்., ராணுவத்தினர் உதவி செய்தனர். இதற்கு பழி தீர்க்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு கூறியுள்ளனர்.
Post a Comment