Header Ads



சவூதி அரேபியாவில் 32 வருடம் சிறையிலிருந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


(inneram) கொலைவழக்கில் சிக்கி 32 வருடம் சிறையிலிருந்த சவூதியர் ஒருவருக்கு நேற்று அந்நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு

32 வருடங்களுக்குமுன் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட சச்சரவின் போது தன் நண்பர் ஒருவரை அடித்துத் தடியால் தாக்கிக் கொன்றார் அப்துல்லாஹ் ஃபந்தி அல்ஷம்மரி என்பவர். அப்போது அவருக்கு வயது 21. இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல்லாஹ், குருதிப் பணம் கொடுக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பையடுத்து, ஐந்து வருட சிறைவாசத்திற்குப் பிறகு குருதிப் பணம்' கொடுத்து விடுதலையானார். விடுதலையடைந்த மகிழ்ச்சியில் அவர் திருமணமும் செய்துகொண்டார்.

ஆனால், இரு வருடஙக்ள் கழித்து, கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்ததையடுத்து அப்துல்லாஹ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இம்முறை நீதிமன்றம் அப்துல்லாஹ்வுக்கு மரண தண்டனை விதித்தது. கொலையுண்டவரின் வாரிசு மன்னித்தாலேயொழிய மரண தண்டணை உறுதி என்ற நிலையில், செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாவுக்கு மன்னிப்பு கிடைக்க அரச குடுமபத்தினர் பெருமுயற்சி செய்தனர்.

கொலையுண்டவரின் மகன் பருவ வயதை அடைந்ததும், அவரிடம் ஹயில் மாகாண துணை ஆளுநர் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் சாத் உள்ளிட்டோர் கொலையாளியை மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் கொலையுண்டவரின் மகன், தன் தந்தையைக் கொன்றவரை மன்னிக்க மறுத்துவிட்டார். இதனால் கொலையாளியான அப்துல்லாஹ்வுக்கு 32 வருடங்களுக்குப் பின்னர் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரணதண்டனை பெற்ற அப்துல்லாஹ் அல்ஷம்மரி தன் சிறைக் காலத்தில் குர் ஆனை மனனம் செய்தவராகவும், சிறைக் கைதிகளுக்கு நல்லுபதேசங்களைப் போதிப்பவராகவும் ஆகிவிட்டிருந்தார். நேற்று அவர் பிரியா விடை பெற்றுக்கொண்ட போது, அவருடனிருந்த சிறைக் கைதிகள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் என்று சவூதி நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.