இரு கண்களில் பார்வையை இழந்த மாணவன் 3ஏ சித்திபெற்று சாதனை
(Un) ஊனமென்பது எதற்கும் தடையில்லை எதையும் முயற்சித்தால் நாம் சாதித்து காட்ட முடியும். கலைப்பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்ட நிலையில் 4ஆவது இடத்தைப் பிடித்து சாதித்த சுன்னாகம் வாழ்வக மாணவன் சொர்ணலிங்கம் தர்மதன் கூறுகின்றார்.
தனது இரு கண்களில் பார்வையை இழந்த நிலையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியுடனும் கற்றேனென மிகவும் உருக்கமாக தெரிவித்தார் அவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
யாழ். மாவட்டத்தில் என்னைப் போன்ற விசேட திறமையுள்ள மாணவர்களுக்கு கற்றலை தொடர்வதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. சாதாரண மாணவர்களுடன் ஒப்பிடும்போது எமக்கு விசேட வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது 9 வயதில் இரு கண்பார்வையையும் முற்றாக இழந்து விட்டேன். ஆனால் நம்பிக்கையை நான் இழக்கவில்லை. வாழ்வகத்தின் உதவியுடன் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கண்பார்வையுள்ள சாதாரண மாணவர்களுடனேயே கற்றேன்.
எனது விடாமுயற்சிக்கு ஆசிரியர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன் என்றார்.
வாழ்த்துக்கள் தர்மதன்... எல்லா வசதிகளும் இருந்தும் எங்களது சகோதரர்கள் பரீட்சைகளில் கோட்டை விடுகிறார்கள்... சிறந்த முன்மாதிரியாக இவர் இருக்கிறார்..
ReplyDelete