Header Ads



ஹில்லாரி கிளிண்டனின் மேடை பேச்சுக்கு 2 லட்சம் டாலர் சம்பளம்

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த ஹிலாரி கிளிண்டன் உடல் நிலை காரணமாக சமிபத்தில் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் மேடைப் பேச்சாளராக மாறியுள்ளார். இவர் ஒரு முறை பேசுவதற்கு 200,000 டாலர்களை ( இந்திய மதிப்பில் ரூ.1,08,94,000/-) பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த அளவு பணத்தை அவர் பெற்றால், அமெரிக்காவில் ஒருமுறை மேடையில் தோன்ற அதிக பணம்  பெறும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக  இருப்பார். இவர் வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்தபோது 186,000 டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1,01,31,000/-) சம்பளமாகப் பெற்றார். 

நியூ யார்க்கிலுள்ள ஹர்ரி வாகர்ஸ் என்ற நிறுவனம் இவரின் பிரதிநிதியாகச் செயல்படுகிறது. இவரின் கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுக்கும் இந்நிறுவனமே பிரதிநிதியாக செயல்படுகிறது. கிளிண்டன் இது போன்ற 471 மேடைப் பேச்சுகளை கடந்த 11 வருடங்களில் வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு பேச்சுக்கு சராசரியாக 189,000 டாலர்களைப் (ரூ.1,02,94,000/-) கிளிண்டன் பெற்றுள்ளார். 

No comments

Powered by Blogger.