எகிப்தில் ஏப்ரல் 27 இல் மீண்டும் பாராளுமன்ற தேர்தல்
ஏப்ரல் 27ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கும் என்று எகிப்தின் அதிபர் மொஹமத் மோரிஸ் அறிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு முபாரக்கின் ஆட்சி நீக்கப்பட்ட பிறகு பிற சமயச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்தன. ஹோசினி முபாரக் ஆட்சியில் இஸ்லாமிய கட்சிகளால் பிளவு பட்டுக் கிடந்த எகிப்தில் தற்போது ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடை பெற உள்ளது.
ஏப்ரல் 27-ல் தொடங்கும் இந்தத் தேர்தல் ஜூன் மாதம் இறுதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளன. ஜூலை 6-ம் தேதி புதிய நாடாளுமன்றம் செயல்பட தொடங்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தல் எகிப்து நாட்டில் ஒரு நிலையான அரசை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டு வன்முறைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சீர் செய்யப்படும் என நம்பப்படுகிறது.
Insha Allah help you
ReplyDelete