Header Ads



இந்த ஆற்றில் குளித்தால் 25 இலட்சம் ரூபா பரிசு

சீனாவில் நதிகள் அசுத்தமாகி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. நதியில் அதிகாரி குளித்தால் இந்திய ரூ.25 லட்சம் பரிசு தருவேன் என்று தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் தொழிற்சாலைகள் மற்றும் வாகன பெருக்கத்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர், காற்று மாசு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இப்போதைக்கு 118 நகரங்களில் நிலத்தடி நீர் 64 சதவீதம் அளவுக்கு மாசுபட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிஜியாங் மாகாணம், கேங்னன் கவுன்டியில் ஓடும் நதி முற்றிலும் மாசடைந்துள்ளது. 

சென்னையில் ஓடும் கூவம் நதியைவிட மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்த நதியில் கேங்னன் கவுன்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தலைவர் அரை மணி நேரம் குளித்தால் ரூ.25 லட்சம் பரிசளிக்கிறேன் என்று தொழிலதிபர் ஜின் ஜெங்மின் ஆன்லைனில் அறிவித்துள்ளார். இதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அதிகாரிகள் பரபரப்பு அடைந்துள்ளனர். இதுபற்றி ஜின் ஜெங்மின் கூறுகையில், கேங்னன் கவுன்டியில் ஓடும் நதி மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நதியில் விலங்குகள்கூட குளிக்காது என்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.