Header Ads



24 மணித்தியாலங்களிற்குள் நாடு திரும்ப கொழும்பிலுள்ள சவூதி தூதுவருக்கு உத்தரவு


(Tm) இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை நாடு திரும்பவுள்ளார் என கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலய வட்டாரங்கள் தெரிவித்தன.

24 மணித்தியாலங்களிற்குள் நாடு திரும்புமாறு கொழும்பிலுள்ள தூதுவருக்கு சவூதி அரேபிய அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக அறிவித்திருந்தது. இதனையடுத்தே இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் உடனடியாக நாடு திரும்பவுள்ளார்.

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு கடந்த ஜனவரி 9ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் கடந்த ஜனவரி 9ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் மீளழைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் திருப்பியழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தான் மீள் அழைக்கப்பட்டமைக்கும் றிசானா விவகாரத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. தான் மீள் அழைக்கப்பட்டது தனது 3 வருட சேவைக்காலம் முடிவடைந்தமையால் தான். இது வலமையாக நடாத்தப்படும் ஒரு நிகழ்வே என்று சவுதிக்கான இலங்கை தூதுவர் அஹமத் ஜவாத் அரிக்கை விட்டிருந்தாரே,

    ReplyDelete

Powered by Blogger.