தோல் மற்றும் காலணி கண்காட்சி -2013 (படங்கள்)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கை தோல் மற்றும் காலணி தொழில் நிறுவனங்கள் துறைக்கு 'தொடர் மற்றும் தற்போதைய ஆதரவு' உள்ளது இலங்கை தோல் உற்பத்தியானது தென் ஆசிய சந்தையில் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடத்துக்கு ஏற்றம் அடைந்துள்ளது. " என்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு கொழும்ப பண்டாரநாயக்க சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் இடம் ஐந்தாவது தோல் மற்றும் காலணி கண்காட்சி -2013 திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்,தொழில் முயற்சியான்மை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,ஏற்றுமதி அதிகார சபையின் தலைவரும்,நிறைவேற்று பணிப்பாளருமான கலாநிதி யூசுப் கே.மரைக்கார்,பணிப்பளார் நாயகம் சுஜாதா வீரகோன் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
அங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில்,
இன்று எமது நாடு தென்னாசிய வலயத்தில் தரமான தோல் மற்றும் அது சாரந்த உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் சிறந்த நாட்டின் பெயரை பெற்றுள்ளது.இதன் மூலம் பிராந்தியத்துக்கு தேவையான தோல் சார்ந்த உற்பத்திகளை வழங்கக் கூடிய தளமாக மாறியுள்ளது.குறிப்பாக இலங்கையின் பொருளாதார வளர்சிக்கு இந்த தறையின் பங்களிப்பு இன்றியமையாதது என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,இந்த பாதணிகள் மற்றும் தொல் சார்ந்த உற்பத்தி துறைகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுள்ளார்கள் என்றும் கூறினார்.
Post a Comment