Header Ads



பேஸ்புக்கிலிருந்து வெளியேறினால் 200 டொலர் சன்மானம்


சமூகவலைத் தளமான பேஸ்புக்கிலிருந்து வெளியேற, தனது மகளுக்கு 200 டாலர்கள் அவரது தந்தை வழங்க உள்ளது, இளையதலைமுறையினரிடையே, சமூக வலைத்தளங்களின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் இணையத‌ளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

போஸ்டன் எனர்ஜி நிறுவன உயர் அதிகாரியாக இருப்பவர் பால் பையர், இவரது விடலை வயது மகள் ரசேல் பையர், எந்நேரத்திலும், எப்போதும் பேஸ்புக்கிலேயே மூழ்கியிருப்பார். அவள் பேஸ்புக்கிலிருந்து வெளியேற, 200 டாலர்கள் வர தயாராக இருப்பதாக தந்தை கூறியதையடுத்து, சட்டப்பூர்வ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் முதற்கட்டமாக 50 டாலர்களும், ஜூன் மாதத்தில், மீதமுள்ள 150 டாலர்களும் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.