எகிப்தில் பலூன் வெடித்துத் தீப்பற்றியது - 19 பேர் மரணம்
கெய்ரோ எகிப்தின் லக்ஸர் நகருக்கருகிலே, இடம்பெற்ற பலூன் விபத்தொன்றில் பிரிட்டன்,பிரான்ஸ்,ஹொங்கொங் மற்றும்,ஜப்பானைச் சேர்ந்த 19 சுற்றுலாப் பயணிகள் பலியாகியுள்ளனர். லக்ஸரின் மேற்குப் பகுதியில் வயலொன்றுக்கு மேலாக 1000 அடி உயரத்தில் இந்த பலூன் வெடித்துத் தீப்பற்றி எரிய ஆரம்பித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏழு மாடி உயரமான கட்டிடத்திலிருந்து பாய்வது போல பலூனிலிருந்தவர்கள் தரைக்குப் பாய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பி.பி.சி செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இவ்விபத்தில் பலூன் விமானி உட்பட இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
லக்ஸர் நகரின் ஹர்னக் கோயில் மற்றும் அரசர்களின் கல்லறை உட்பட பிரபல்யமான பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சூடான வாயுவில் இயங்கும் பாலூன்களில் கொண்டு சென்று காண்பிக்கப்படுகின்றனர். இவ்வாறு ,பறந்து திரியும் பல பலூன்களில் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பே இவ்விபத்துக்குக் காரணமெனக் கூறப்படுகின்றது. மின் கேபிளொன்றில் உயர் அழுத்தத்துடன் இந்த பலூன் மோதியமையாலேயே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக பலூனைச் செலுத்தி வந்தவர் பி.பி.சிக்கு தெரிவித்தார்.
இச் சம்பவத்தில், 2 பிரான்ஸ்நாட்டவர்,2பிரிட்டிஷ்காரர்கள்,4 ஜப்பானியர்கள், மற்றும் 9 ஹொங்கொங் நாட்டவரும் பலியாகியுள்ளனர்.
Post a Comment