பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 192 வீடுகள்
சீனாவின் தென் பகுதியிலுள்ள லுபெங் நகரில் போலியான உறுதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி 192 வீடுகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் வாங்கியுள்ளதாக பிராந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சூஹஓ ஹைபின் நீண்ட காலத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் பதவியில் இருக்கப் போவதில்லை. ஆனால், உள்ளூர் கொம்யூனிஸ்ட் கட்சியில் சிரேஷ்ட பதவியில் ஹைபின் இருப்பாரென கூறப்படுகின்றது.
இவ்வாறு அடையாள அட்டைகளை ஹைபின் பயன்படுத்தியுள்ளதாகவும் அவருடைய சகோதரரால் சொந்தமாக்கப்பட்ட கட்டிடங்களின் உறுதி பயன்படுத்தப்பட்டதாகவும் ஷிங்குனா அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது போன்று மேலும் பல அதிகாரிகள் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பலவகையான சொத்துகள் வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாரம் 1 மில்லியன் யுவான் பெறுமதியான 40 இற்கு மேற்பட்ட சொத்துகளை போலி ஆவணங்கள் கொண்டு வாங்கியுள்ளமை தொடர்பாக பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண் யூலின் நகரிலுள்ள வர்த்தக வங்கியொன்றில் உபதலைவராக பதவி வகித்திருந்தவராவார்.
திங்கட்கிழமை ஹோங் அய்யுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான ஆவணங்கள் தயாரித்தமை அரச முத்திரையை தவறாகப் பயன்படுத்தியமை போன்ற குற்றச் சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஊழல்களுக்கு எதிரான பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது ஹைபின் தனது மனைவியின் பெயரில் பல சொத்துகள் வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
Post a Comment