Header Ads



திருமண வீட்டார் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 19 பேர் மரணம் - பாகிஸ்தானில் சம்பவம்


பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான சமர்பாக் என்ற ஊரில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற 45 பேர் தனியார் பஸ் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

புதி பகுதியில் உள்ள சர்சடா சாலையில் வந்துக் கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தலைகுப்புற ஆற்றில் பாய்ந்தது. ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் பணியினர் கிரேன் மூலமாக பஸ்சை ஆற்றில் இருந்து வெளியே எடுத்தனர். வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சுமார் 10 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

அவர்களில் சிலர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என மீட்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார். 

No comments

Powered by Blogger.