Header Ads



அமெரிக்காவை பனிப்புயல் மிரட்டுவதால் 1700 விமானங்கள் ரத்து



அமெரிக்காவை பனிப்புயல் மிரட்டுவதால் 1700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வட கிழக்கு மாகாணங்களில் கடும் பனி நிலவுகிறது. இந்த நிலையில் அங்கு பனிப்புயல் வீசத்தொடங்கியது.

இதன் காரணமாக, நியூயார்க்கில் இருந்து பாஸ்டன் வரை பனி கொட்டுகிறது. இதுவரையில் 2 அடி உயரத்துக்கு பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்ட்போர்டு, நியூ இங்கிலாந்து உள்ளிட்ட பல நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மணிக்கு 65 மைல் வேகத்தில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்கில் 10 முதல் 14 அங்குலம் வரையில் பணி கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்புயல் வீசுவதால் வடகிழக்கு மாகாணங்களில் 1700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, நியூ ஜெர்சி, நியூயார்க், நின்லாங் ஐலேண்ட், மசாசுசெட்ஸ், ரோட்ஐலேண்ட், கானக்டிட், ஹார்ட் போர்டு, ஆகிய பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இது நியூஹாம்ஷயர் பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.