பிழை இருந்தால் மன்னிக்கும்படி போப் 16வது பெனடிக்ட் வேண்டுகோள்
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக கருதப்படும், போப், 16வது பெனடிக்ட், இம்மாதத்துடன் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.போப் ஜான்பால் மறைவுக்கு பின், 2005ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 16வது பெனடிக்ட், போப்பாக பதவி ஏற்றார்.
கத்தோலிக்க பாதிரியார்கள் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்களை, இவர் தீர்த்து வைத்தார். பல நாடுகளில் தேவாலயங்கள் தாக்கப்பட்ட போது, தன்னுடைய பேச்சில் பிழை இருந்தால் மன்னிக்கும்படி, இவர் கோரியுள்ளார். தற்போது, 85 வயதாகும், 16வது பெனிடிக்ட், பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். இம்மாதம், 28ம் தேதி இவர் பதவி விலக உள்ளார்.
இது வரை இருந்த போப்புகளில் கடந்த 600 ஆண்டு கால வரலாற்றில் இவர் தற்போது ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அனைவரும் பணியை நிறைவு செய்துள்ளனர்.
""வாடிகன் நிர்வாகத்தை கவனிப்பதற்கு, உடல் பலம் மற்றும் மனோ பலம் தேவை. சமீப காலமாக இவை, என்னிடம் குறைந்து வருகின்றன. எனவே, தான், பதவி விலக முடிவு செய்துள்ளேன்,'' என, அவர் தெரிவித்துள்ளார். போப் பதவி வகித்தவர்கள், கடைசி வரை அந்த பதவியில் இருந்த படியே இறந்துள்ளனர். இப்போது முதன் முறையாக, 16வது பெனிடிக்ட், பதவி விலகுகிறார்.
புதிய போப் தேர்வு எப்போது ?
அடுத்த போப்பை, கார்டினல்கள் தேர்வு செய்வர். போப் பதவி விலகிய இரண்டு வாரத்தில், புதிய போப் தேர்வு செய்யப்பட வேண்டும். பண்டைய காலங்களில், போப்பை தேர்வு செய்வதற்காக, கார்டினல்கள் பதிவு செய்த ஓட்டு சீட்டுகள் எரிக்கப்படும். இந்த புகை, புகை போக்கி வழியாக வெளியே வந்த உடன், புதிய போப் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக, வெளியே காத்திருக்கும் மக்கள் தெரிந்து கொள்வர். அதன் பின், புதிய போப், பால்கனியில் தோன்றி, மக்களை ஆசீர்வதித்து உரையாற்றுவார்.
Post a Comment