சிங்கம் புலியுடன் போராடும் 13 வயது சிறுவன்
சிங்கங்களின் தாக்குதலில் இருந்து, பண்ணை மாடுகளை காப்பாற்ற, கென்ய சிறுவன், தந்திரமான வழியை கையாண்டு வருகிறான்.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் விலங்குகள் பூங்கா உள்ளது. இந்நகரில், பெரிய கட்டிடங்களை கொண்ட பகுதிகளில் கூட, சிங்கம், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள், நடமாடும். நகருக்குள் வரும், சிங்கங்கள் அங்குள்ள பண்ணைகளில் புகுந்து, ஆடு, மாடுகளை சாப்பிட்டு விடுகின்றன. நைரோபி சேர்ந்தவன் ரிச்சர்டு டுரேரே, 13. சிங்கங்களிடம் இருந்து, கால்நடைகளை காப்பாற்ற, தந்திரமான வழியை கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.
இது குறித்து ரிச்சர்டு கூறியதாவது,
இரவில் நாங்கள் தூங்கும் சமயத்தில், பண்ணைக்குள் நுழையும் சிங்கங்கள், மாடுகளை கொன்று தின்று விடும். ஒரு முறை, கையில் டார்ச் லைட்டுடன், நான், பண்ணைக்கு அருகில் சென்றபோது, சிங்கங்கள் வெளிச்சத்தை கண்டு பயந்து ஓடுவதை கண்டேன். அசையும் விளக்கு வெளிச்சங்கள், சிங்கங்களை மிரட்டும் என்பதை கண்டுபிடித்தேன். அதன்பின், பண்ணையை சுற்றிலும், விளக்குகளை பொருத்தி, அவை அவ்வப்போது அணைந்து எரிவது போல, அவற்றுக்கு மின் இணைப்பு கொடுத்தேன். எனது "ஐடியா' வெற்றிகரமாக வேலை செய்தது. அதன்பிறகு, சிங்கங்கள், எங்கள் பண்ணைக்கு அருகே வருவதில்லை. இவ்வாறு ரிச்சர்டு கூறினான். சிறுவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறும், கருத்தரங்கில் கலந்து கொள்ள, அவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment