கிழக்கு கடற்பரப்பில் உயிருக்கு போராடிய 139 பேர் மீட்பு (படங்கள்)
(ஹாதி, இக்பால் எம் பிஹாம்)
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த பங்களாதேஷ், மியன்மார் நாட்டைச்சேர்ந்த 139 மீட்பு, ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அம்பாரை மாவட்ட ஒலுவில் துறைமுக கடற்படையினரால் கிழக்கு கடலில் 53 கடல் மைல்களுக்கப்பால் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த 14 மியன்மார் நாட்டைச்சேர்ந்தவர்களும் 125 பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்தவர்களும் படகு பழுதடைந்த நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது கடற்படையினரால் மிகவும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் ஒரு பெண் உட்பட மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவர். நேற்றிரவு (2013.02.02) 10 மணியளவில் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களைத்தொடர்ந்து இவர்களைத்தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டபோது இன்று அதிகாலை (03.02.2013) 01.00மணியளவில் இவர்களை 53 கடல் மைல்களுக்கப்பால் மீட்கமுடிந்ததாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
மிகவும் மோசமான உடல்நிலையுடன் பாதிக்கப்பட்ட இவர்கள் ஒலுவில் துறைமுக கடற்படை முகாமில் அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நிலை தேறிவருவருகின்றனர். இன்று காலை அவர்களுக்கு கடற்படையினரால் சமைத்த உணவும் வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தாம் மியன்மாரில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் திகதி மலேசியா நோக்கி புறப்பட்டதாகவும் தங்களுடன் வந்தவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார் அத்துடன் இலங்கை கடற்படையினரால் தாங்கள் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்களில் 11பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவினரால் ஒலுவில் துறைமுக கடற்படை முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இறந்தவரின் சடலம் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment