13 வயது மாணவி தேய்காய் திருட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டது
(Tm) 13 வயது மாணவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த தேய்காய் திருட்டு குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஹொரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கே பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
320 ரூபா பெறுமதியான 8 தேங்காய்களை திருடியதாக பாடசாலை மாணவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.
வுழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பில் குறித்த மாணவிக்கு நோட்டீஸ் மூலம் அறிவிக்குமாறு ஹொரணை; நீதிமன்ற நீதவான் மஹிந்த ரணசிங்க பொலிஸாருக்கு பணித்தார்.
இந்த சிறு சம்பவமானது ஊடகங்கள் வாயிலாக பெரிதுபடுத்தப்படுமாயின் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு அது பிள்ளையின் கல்விசெயற்பாடுகளுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை கட்டிடத்திற்கு நிறப்பூச்சி பூசுவதற்காக பாடசாலை நிர்வாகத்தினால் கோரப்பட்ட 900 ரூபா பணத்தை திரட்டிக்கொள்ள முடியாத குறித்த மாணவி அருகிலுள்ள தேங்காய் தோட்டத்தில் 08 தேங்காய்களை களவெடுத்தாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் ஊடகங்களில் வெளியானதையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்வியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment