தம்புள்ள முதல் தெஹிவளை வரை 10 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன - முஜீபுர் ரஹ்மான்
தம்புள்ளயில் தொடங்கி தெஹிவளை வரை 10 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கும்போது அரசாங்கம் ஒரு பள்ளிவாசல் கூட தாக்கப்படவில்லையென அரசாங்கம் பொய் கூறுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் இதுதொடர்பில் மேலும் கூறியிருப்பதாவவது,
பள்ளிவாசல் தாக்குதல்களைத்தான் ரவூப் ஹக்கீம், கிழக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால். பாராளுமன்றத்தில் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லையென அமைச்சர் நிமால் சிறிபால் டி. சில்வா பொய்கூறும் போது ஏன் அவர் மௌனம் காத்தார்..?
முஸ்லிம்களின் உரிமைகள் படிப்படியாக பறிபோய் கொண்டிருக்கும்போது மௌலானா சொல்கிறார் இலங்கை வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு நிறைய நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம், அதான் ஒலிபரப்பப்படுகிறதாம். என்ன இது இலவசமாகவா கிட்டுகிறது..?இலட்சக்கணக்கில் பணம் அறவிட்டுத்தானே ஒலிபரப்பாகிறது..?
2007 இல் மௌலவி நியமனம் வழங்கப் போவதாக அறிவித்த அரசு, மௌலவி பரீட்சையை நடாத்தியது. 400 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதேயாண்டில் 100 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. அதன்பின் 2013 ஆகியும் ஒருவருக்குகூட மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை. தெரிவு செய்யப்பட்ட 300 பேரும் இங்கு ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான உண்மைகளை நாம் முஸ்லிம்களுக்கு ஆதாரத்துடன் விரைவில் பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம் எனவும் முஜீபுர் ரஹ்மான மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment