சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு 100 கசையடி ஒரு வருடம் சிறை
(Tm) சவுதி அரேபியாவில் தனது நண்பருடன் இணைந்து சூனியம் செய்த குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இலங்கையர் ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 100 கசையடிகளை வழங்குமாறும் ஒருவருடம் சிறையில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
சவுதியில் வீட்டு சாரதியாக பணிபுரிந்த பதியத்தலாவையை சேர்ந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சூனியம் செய்யதுடன் இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்ட குறித்த நபர் ஹம்முல் ஹம்மாம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பதியத்தலாவவை சேர்ந்த குறித்த சந்தேகநபர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு விதிக்கப்பட்டுள்ள ஒருவருடம் சிறை தண்டனை இவ்வருடம் மே மாதத்துடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தண்டனைக்காலமும் தண்டனையும் நிறைவடைந்ததன் பின்னர் அவர் நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துங்கசிரிதான் புத்தர் சிலையை வழிபட்டு பிடிபட்டதாக முன்னர் கதை பரப்பியிருந்தார். இதனைக் கேள்விப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நட்த்தியதை யாவரும் அறிந்ததே.
ReplyDeleteஇப்படித்தான் இவர்கள் ஏதாவது தவறு செய்வது, பின்பு தங்களுக்கு சாதகமாக, மக்கள் கிழ்ர்ந்தெழும்புவதற்கு ஏற்றதாக எதனையாவது சொல்லி தூண்டிவிடுவது.
இப்படிப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கமே பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.