அரசிற்கு எதிராக 10 கட்சிகள் ஒன்றிணைவு - திங்கட்கிழமை உடன்படிக்கை கைச்சாத்து
(TL) அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 10 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணையவுள்ளன. இது தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிட்ட 10 கட்சிகளின் தலைவர்களும் நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, நவ சிஹல உறுமய, மவ்பிம ஜனதா கட்சி, ருஹுனு ஜனதா கட்சி, எக்சத் ஜனதா பெரமுன, முஸ்லிம் தமிழ் முன்னணி ஆகிய பத்து கட்சிகளும் சுதந்திரத்திற்கான மேடை என்ற சிவிலமைப்பும் ஒரு ஒழுங்கமைப்பிற்குள் வரும் நடவடிக்கை நாளை 11 ஆம் திகதி திங்கட்கிழமை 2 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இதன்படி ரணில் விக்கிரமசிங்க, ஆர். சம்பந்தன், மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அருணா சொய்சா, சிறிமா சிறி பெரேரா, அசாத் சாலி மற்றும் சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன ஆகியோர் ஒரு பொதுவான உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளார்கள்.
இந்த உடன்படிக்கை இந்த சம்பந்தப்பட்ட கட்சிகள் மத்தியில் குறைந்தபட்ச கொள்கை உடன்பாடுகளையும், பரஸ்பர உறவுகளையும் தீர்மானிக்கும் ஷரத்துகளை கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஐக்கிய தேசிய கட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன..
ondum nadakka povathu illai
ReplyDeleteAppadi solla vaanadam sila neram Allah Naadina. and aan enda ippa Presidenikku konchem viruppam illamal irukithu Manithargal Vaalvathai averum averudan silarum virumbuhiraarhal illai
ReplyDelete