Header Ads



வீரவன்சவின் பிறவிக்குணம் ஒருப்பக்கம் - பாராளுமன்ற vs நீதிதுறை மோதல் மறுபக்கம்..!


பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றப்பிரேரணை விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்றத்திற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்த அனைத்து நீதியரசர்களையும் நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டும் என பொறியியல் மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 06-01-2013 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு அமைய நாடாளுமன்றத்திற்கு எதிரான தீர்ப்புகளை வழங்கிய அனைத்து நீதியரசர்களையும் அழைத்து அவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அதிகாரத்திற்கு எதிராகவும், அதற்கு மேலாகவும் செயற்படுகின்ற நீதிமன்ற அதிகாரம் உலகில் வேறு எங்கும் இல்லை. இது முற்றிலும் அரசியல் ரீதியான நடவடிக்கை.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் மேற்கொள்ள  முடியாமல் போன விடயங்களை மாற்று வழியில் செயற்படுத்த முன்னெடுக்கப்படும் முயற்சிகள் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குற்றப்பிரேரணை தொடர்பில் அரசியலமைப்புக்கு அமைய உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில் அவற்றை ஏற்கவேண்டியது அனைவரது கடமை என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களால் அரசியலமைப்பை பாதுகாப்பது குறித்து சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளமையினால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தும், அமைச்சர் விமல் வீரவங்சவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் உயரிய நீதிமன்ற கட்டமைப்பை அமைச்சர் சாடியுள்ளமை, அவரின் பிறவிக்குணம் என்றம் வாழ்க்கை தன்மை என்றும் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினரும், நவசமசமாஜ கட்சியின் பொது செயலாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன, அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அரசியல் குற்ற பிரேரணையின் போது நீதிமன்றின் தலையீடு அவசியமாகவுள்ளது.

ஆனால் அதனை இந்த அமைச்சர், திருடனின் தயாருக்கு ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார் என்றும் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பின் சரத்துக்களை வாசித்தறிந்தால் அமைச்சர் விமலுக்கும் உண்மையான விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். sfm

2 comments:

  1. சந்திரிகா ஆட்சியில் தற்போதைய உயர் கல்வி அமைச்சர் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனம் சய்து பேசியதனால் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச் சாட்டில் 2 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்தார். அப்படியானால் உதாசீனம் சையும் இவருக்கு.........!?

    ReplyDelete
  2. சர்ச்சை இல்லாத நீதிமன்றத்தை விமர்சித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை. சர்ச்சையில் உள்ள நீதிமன்றத்தை விமர்சித்தால் 0 தண்டனை. இதுதான் வித்தியாசம். இலங்கை அரசியல் சாசனத்தின்படி பிரதம நீதிபதியை நியமித்தது அரசு என்றால் அதனை விசாரிக்கும் உரிமையும் அந்த அரசுக்கு உண்டு. இதுதான் லொஜிக்........

    ReplyDelete

Powered by Blogger.