Header Ads



கத்தாரில் INSIGHT EDUCATION TRUST இன் அறிமுகம் (படங்கள்)



(மொஹமட் சுபைர்)

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை மாத்திரம் கருத்திற்கொண்டு நாட்டின் முக்கிய கல்விமான்கள், சமூக சேவை ஆர்வளர்கள், கொடை வள்ளல்கள் ஒன்றிணைந்து இஸ்தாபிக்கப்பட்ட INSIGHT EDUCATION TRUST பற்றிய அறிமுக நிகழ்வு 25. 1. 2013 அன்று இரவு 8.00 மணிக்கு கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் (FANAR) கேட்போர் கூடத்தில், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் கத்தார் (SLIC) இன் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில், நாடறிந்த சமூகசேவையாளரும், INSIGHT EDUCATION TRUST இன் Board of Directors அங்கத்தவருமான அல்ஹாஜ் பவ்ஸ் (Rainco நிறுவன உரிமையாளர்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

INSIGHT EDUCATION TRUST ஆனது கல்வியினூடாக வலுவூட்டல் (Empowerment Through Education) எனும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு பாலர் கல்வி தொடக்கம் பட்டப்பின் படிப்பு வரை சகல துறைகளையும் உள்ளடக்கியதாக 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது மாத்திரமன்றி தொழிநுட்பக்கல்வி மற்றும் வியாபார உரிமையாளர்களை வலுவூட்டல் போன்ற விஷேட பகுதிகளிலும் INSIGHT EDUCATION TRUST கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்நிருவனத்தின் அனைத்து முயற்சிகளும் எந்த இலாப நோக்கமும் இன்றி எம் சமூகத்தின் வலுவூட்டலை மாத்திரம் இலக்காகக் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், இலங்கை முஸ்லிம் சமூக மேம்பாட்டில் ஆர்வம் உள்ள சுமார் 300க்கும் அதிகமான சமூக ஆர்வளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வில், சமூகத் தந்திருந்த பல முக்கிய பிரமுகர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு தங்கள் சந்தேகங்களை மனம்திறந்து கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர். பொதுவாக அனைத்து ஆர்வளர்களின் உள்ளங்களிலும் ஏக்கமாக இருந்து வந்த ஆசைகளுக்கு ஒரு அழகான செயல்வடிமாக INSIGHT EDUCATION TRUST அமைந்துள்ளது என்பதை சமூகமளித்திருந்த பிரமுகர்கள் உளம் நெகிழ்ந்து தெரிவித்து கொண்டமை குறிப்படத்தக்கது.

FRIENDS OF INSIGHT எனும் மகுடத்தில் கத்தாரில் உள்ள தனிநபர்கள், கமூக ஆர்வளர்கக்ள, கல்விமான்கள், ஊர்வாரியான சங்கங்கள், ஏனைய அமைப்புக்கள் அனைத்தும் அங்கம் வகிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் திட்டம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இது அனைவராலும் மிகவும் வரவேற்கப்பட்டது. 







No comments

Powered by Blogger.