Header Ads



தமிழ் ஊடகங்களில் பின்னூட்டம் (Comments) பதியும் முஸ்லிம்களின் கவனத்திற்கு..!


தமிழ் இணைய ஊடகங்களில் பின்னூட்டம் பதியும் முஸ்லிம் சகோதரர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை நோக்கமுடிகிறது. மறுபக்கம் இந்த ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் தாராளமாகவே நச்சுக் கருத்துக்களும் வெளியாகின்றன. 

நமது முஸ்லிம் சகோதரர்களில் பலர் அறிந்தோ அறியாமலோ அந்த ஊடகங்களில் பதிவிடும் பின்னூட்டங்கள் பலவேளைகளில் தேவையற்ற விதண்டாவாதங்களை ஏற்படுத்தி விடுவதுடன், உணர்ச்சிவசப்பட்டு எழுத்துக்களை கொட்டும் மாற்றுமத  சகோதரர்கள் புனித இஸ்லாத்திற்கு எதிராகவும், நமது உயிரிலும மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் வசைபாட ஆரம்பித்துவிடுகின்றனர்.

1-1-2013 அன்று தமிழ் இணைய ஊடகமொன்றில் வெளியாகிய செய்தி குறித்து முஸ்லிம் சகோதரர்கள் சிலர் தேவையற்ற கருத்தை பதிவுசெய்து, தற்போது மாற்றுமத தமிழ் சகோதரர்கள் மிகக்கேவலமாக முஸ்லிம் சமூகத்தை வசைபாடுவதையும், முஹம்மது நபிக்கெதிரான கருத்துக்களை முன்மொழிந்திருப்பதையும் நோக்கமுடிகிறது.

அச்சு ஊடகங்களில் இவ்வாறு நச்சுக்கருத்துக்கள் அல்லது இனவாத கருத்துக்கள் தெரிவிக்கப்படும் போது அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு தெரிவிப்பது இலகுவான விடயம். ஆனால் இன்று பல ஆயிரம் தமிழ் இணைய ஊடகங்கள் செயற்படுகின்றன. இவற்றில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருத்துக்கள் எழுதப்படும்போது அவை குறித்து எங்குசென்று முறையிடுவது என்ற விபரமும் நம்மில் பல சகோதரர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.

இவ்வாறு இனவாத கருத்துக்களை பரப்பும் சில தமிழ் இணைய ஊடகங்களுக்கு அவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டினாலும் அவை செவிடன் காதில் ஊதிய சங்கின் நிலைக்கு ஒப்பானது.

இவ்வாறான நிலையில் தமிழ் இணைய ஊடகங்களில் பின்னூட்டம் பதியும் நமது முஸ்லிம் சகோதரர்கள் தேவையற்ற பின்னூட்டங்களை பதியாமலிருப்பதே அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவையாக இருக்கமுடியும்.

அறிந்தோ அறியாமலோ மாற்றுமத தமிழ் சகோதரர்கள் இஸ்லாத்தையும், முஹம்மது நபியையும், முஸ்லிம் சமூகத்தையும் கொச்சைப்படுத்துவதற்கு முஸ்லிம்களாகிய நாம் எவ்விதத்திலும் துணைநின்றுவிட கூடாது.

அத்துடன் எமது பண்பான எழுத்துக்களும், ஆரோக்கியமான விளக்கமும்தான் மாற்றுமத தமிழ் சகோதரர்கள் இஸ்லாத்தை அறிந்திடவும், முஸ்லிம் சமூகம் குறித்த போதிய தெளிவைப்பெறவும் உதவும். இதைவிடுத்து உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டங்களை பதிவதும், தமிழ் சகோதரர்களின் போக்கில் சென்று நாமும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதும் எந்தவிதத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை தேடிதர உதவாது.

எனவே எதிர்வரும் காலங்களிலாவது நமது முஸ்லிம் சகோதரர்கள் தமிழ் இணைய ஊடகங்களில் பின்னூட்டங்களை பதிவதில் விழிப்புடன் செயற்படுவோம். தேவையற்ற பின்னூட்டங்களை பதிவதிலிருந்தும் தவிர்ந்துகொள்வோம்...!

2 comments:

  1. Suitable advice for this period. May almighty Allah show us the rightest path.

    ReplyDelete
  2. anaivarum satharanamaha amaithiya irupphom.
    ellam walla allah phorumaiyai virumpuhiran.
    phorumaiyai kondu vetri peruvhom.

    allathu satharana warthai pirayhohankalal aatharankalai samarpiththu(al hathees)kattunkal.

    ...................allahu akber......................

    ReplyDelete

Powered by Blogger.