இளம் டாக்டர் ஏ.எம்.அஸ்கரின் திடீர் மரணம்..!
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
ஓட்டமாவடி கோறளை பற்று மேற்கு பிரதேசத்தில் அமைத்துள்ள மீராவோடை கிராமிய வைத்திய சாலையில் வைத்திய அத்தியகட்சகராக கடமையாற்றிய குருநாகல் மாவட்ட கெகுனுகொள்ள எனும் பிரதேசத்தை சேர்ந்த யூ.எல். ஆதம்புள்ளே எஸ்.எல்.நாகூர்உம்மா தம்பதிகளின் புதல்வாரன டாக்டர் ஏ.எம்.அஸ்கர் கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணியளவில் திடீர் மரணமடைந்தார். வைத்திய சேவையினை முடித்து விட்டு தனது தங்குமிடம் திரும்பி ஓய்வெடுக்கும் வேளையிலேயே இவர் மாரடைப்பால் தீடீர் சுகயீனம் முற்றுள்ளார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே மரணமடைந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் 1973ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி பிறந்தார்.
இவர் தமது ஆரம்ப கல்வியை குருநாகல் மாவட்ட கெகுனுகொள்ள தேசிய பாடசாலையில் கல்வி பயின்றார். தாம் கல்வி கற்கும் பருவத்தில் சிறந்த நல்ஒழுக்கமுடைய மானவராகவும் கானப்பட்டதோடு மாத்திரமல்லாது சிறந்த சமூக சிந்தனையாளனாகவும் விளங்கினார்.
தமது வைத்திய மேல் படிப்பினை களனி பல்கலை கழக வைத்திய பீடத்தில் பூர்த்தி செய்து கொண்டார்.
வைத்திய பணியினை முதல் முதலாக தமது சொந்த மாவட்டமான குருநாகல் குளியாபிட்டிய ஆதார வைத்திய சாலையில் ஒன்னறை வருடம் வைத்திய பணியினை மேற் கொண்டார்.
ஆதன் பின் இடம் மாற்றம் செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ பயங்கிரவாத பிரச்சினை இடம் பெற்ற காலப்பகுதியில் தமது 34வது வயதில் ஓட்டமாவடி கோறளை பற்று மேற்கு பிரதேசத்தின் எல்லை கிராமமான மீராவோடை கிராமத்தில் தமது 2வது கடமை பெறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
இவர் தமது கடமை பொறுப்பினை ஏற்று கொண்ட பிறகு வைத்தியசாலையின் முகாமைத்து கட்டமைப்பில் நல்ல மாற்றம் காணப்பட்டது. உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உழியர்கள் தமது கடமை பொறுப்புக்களை சரியாகவும்,பொறுப்புனர்வுடனனூம் மேற்கௌ;ளவும் இது வழியமைத்து அதன் பின் கடந்த 2012.01.12அன்று ஓட்டமாவடி பொது சுகாதார வைத்திய அதிகாரியாகவும் கடமை பொறுப்பினை ஏற்று அதனையும்; சிறப்பாக செயல்படுத்தி வந்தார் அது மட்டுமல்லாது தாம் ஒரு வைத்தியராக இருத்தாலும் தமக்கு கீழ் உள்ள மூத்த உத்தியோகத்தர்கள் ஊழியர்களை மரியாதையாகவும் அண்னன்,தம்பி என்ற உறவின் அடிப்படையில் சகோதர மணப்பான்மையுடன் நடாத்தியதாக வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சான்று பகிர்கின்றனர்.
அது மட்டுமல்லாது வைத்திய சேவைகளை நாடி வரும் தமது சேவை நாடிகளை மிகவும் கருனையோடும் பாசத்தோடும் அரவனைத்து சிகிச்சை அழித்த வரலாறுகள் மறக்க முடியாத கதையாக ஒவ்வரு சேவை நாடியின் மக்களின் சோக புலம்பலாக வாய் விட்டு பேசி அழுத காட்சியினை கண்களின்னூடாக கான முடிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை முடிந்து கொண்டு தாம் கடமையாற்றிய வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டார். கல்குடா மீராவோடை பிரதேசத்தின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு ஒரு மரணிந்த வைத்திய அதிகாரியை பார்வையிடுவதற்கு மக்கள் அணியனியாக திரண்டனர் பாடசாலை மாணவர்கள் முதல் அடி மட்டத்தில் வறுமை கோட்டிக்கு கீழ் வாழ்கின்ற ஏழை மக்கள் உட்பட கிழக்கு மாகாண சபையின் பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர்,முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண பிராத்திய சுகாதார திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் சதுர் முகம் உற்பட பல வைத்தியர்கள் பிரதேசத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அன்றைய நிகழ்வுகளை பார்க்கின்ற போது தாய்மார்கள் மற்றும் கலந்து கொண்ட பிரமுகர்கள் கண்னீர் மழ்க அழுதமையும் மீராவோடை பிரதேசம் அன்றைய தினம் துயரத்தால் ஆங்காங்கே வெள்ளை நிற கொடிகளை தொங்க விட்டு தமது கவலையை வெளிப்படுத்தினர். வெள்ளிக்கிழமை 11.12.2012 அன்று மு.ப.11.45 மணியளவில் மிராவோடை வைத்திய சாலையில் மக்கள் பார்வைக்காகப்பட்டிருத்த வைத்தியர் அஸ்கர் அவர்களின் ஜனாஸா அவரின் சொந்த ஊருக்கு உறவினர்களாலும் பொது மக்களினாலும் பல வாகன தொடர் அணிகளுக்கிடையில் எடுத்து செல்லப்பட்டது.
அன்று மாலை 4.30 மணியளவில் அவரின் ஊருக்கு ஜனாஸா சென்றடைந்தது. அவரின் ஜனாஸாவினை எதிர் பார்த்து நின்ற பெரும் தொகையான மக்கள் கண்னீர் விட்டு அழுதனர்.அவரின் இல்லத்தில் மக்கள் பார்வைக்காக ஜனாஸா வைக்கப்பட்டு. சுமார் 8.30 மணியளவில் குருநாகல் கெகுனுகௌ;ள பிரதேச ஜூம்ஆ பள்ளி வாயலுக்கு ஜனாஸா தொழுகைக்காக எடுத்து செல்லப்பட்டது தொழுகைக்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி இருத்தனர் தொழுகைக்கு முன்பாக அப் பள்ளி வாயளின் இமாம் உரையாற்றுகையில்,,
தாம் பள்ளிவாயல் கடமையில் ஈடுபட்டிருத்த காலத்தில் ஒரு போதும் கானாத கூட்டத்தினை தாம் இன்று கான்பதாகவும் மரணித் வைத்தியரின் சிறந்த செயற்பாடு குறித்தும் விளக்கினார். அதன் பின் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உரையாற்றினார்.அவர் தமது உரையில் தாம் மட்டக்களப்பு மாவட்ட அனர்ந்த நிவாரன சேவைகள் அமைச்சராக இருக்கின்ற காலத்தில் யுத்தம் தலை தூக்கி இருத்த போது வைத்திய கடமையினை தமது பிரதேசத்தில் வந்து மிக சிறப்பாக ஒரு சிறந்த சமூக சேவகனாக இருந்து கடமையாற்றி மக்களின் அன்பை பெற்ற தாம் கண்ட சமூக பணியாளன் ஒரு அதிகாரி டாக்டர் அஸ்கர் ஒருவர்தான் என குறிப்பிட்டார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் என்றும் எமது மட்டக்களப்பு கல்குடா முஸ்லிம் சமூகம் இவரை மறக்க மாட்டாது இவரின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு கிடைந்த மா பெரும் இழப்பாகும் அத்த வகையில் நாங்கள் அனைவரும் இவ்வாறான ஒரு சிறந்த வைத்தியரை சமூக சேவகனை எமது பிரதேசத்திற்கு தந்த குருநாகல் மாவட்ட கெகுனுகௌ;ள மக்களுக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துடன் கன்னீர் மழ்கினார். அதன் பின் ஜனாஸா தொழுகை இடம் பெற்று நல்லடக்கத்திற்காக மையவாடிக்கு ஜனாஸா எடுத்து செல்லப்பட்டு இரவு 10.00 மணியளவில் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்ட பின் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தரும் ஜம் இய்யதுல் தஃவதில் இஸ்லாமியாவின் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களால்; உரையாற்றப்பட்டு துஆ பிராத்தனையுடன் மக்கள் கலந்து சென்றனர். மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் வரலாற்றில் மிக நீன்ட காலம் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் கடமையாற்றி கடமையில் இருக்கும் போதே மரணிந்த ஒரு வைத்திய அதிகாரி என்றால் டாக்டர் அஸ்கர் அவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
Innalillahi wa inna ilaihi rajioon
ReplyDelete"இன்னாலில்லாஹி வஇன்னா இலஹிராஜிஊன்" எல்லாம் வல்ல இறைவா எனது உடன் பிறவா தம்பி இவ்வளவு மக்கள் அன்பை பெற்று மிக குறுகிய காலத்தில் அன்னாரை உனது ஆணைப்படி எடுதுக்கொண்டாய் . அன்னாரது எல்லா முன் பின் பாவங்களை மன்னித்து கப்ருடைய வேதனையில் இருந்து அவரை பாதுகாத்து மறுமையின் தன்குமிடமான பிர்தவ்ஸ் என்னும் சொர்கபுரியில் அவரை வாழ்வதற்கு அருள்புரிவாயாக ஆமீன்
ReplyDeleteஇஷாக் ரஹீம்
கேகுனகொள்ள
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇறைவ அன்னாரை மன்னித்து பொருந்திகொள்வாயாக
ஓர் சம்பவம் நினைவுக்கு வருகிறது. கெகுனகொல்ல தேசிய பாடசாலையில் நடந்த FEED என்ற அமைப்பின் அங்குராப்பன வைபவத்தில் பல மூத்த சமூகத் தொண்டர்களை சிறப்பிக்கும் போது Dr .அஸ்வரின் தந்தையும் சிறப்பிக்கப் பட்டர். அவர்தான் அதம்புள்ள சேர் . அப்போது அறிவிப்பாளர் கூறினார்." 1970 /80 காலப்பகுதி இருக்கும். அக்காலப்பகுதியில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பு வைப்பார் எமது இந்த ஆசிரியர். " என்று குறிப்பிட்டுவிட்டு "இவர் சமூகத்துக்காக செய்த சேவை இவரது அனைத்து பிள்ளைகளையும் கல்விமான்களாக மாற்றி இருக்கிறது "என்று குறிப்பிட்டார். அவ்வாறான சிறந்த ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் இந்த Dr அஸ்வர். சிறந்த சமூக சிந்தனையாளர். அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வானாக
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அல்லாஹு தஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் இனைக் கொடுத்தருள்வானாக. ஏற்றுக் கொள்வானாக. நல்லவர்களுக்கு ஆயுள் குறைவு என்பது உண்மைதானோ?
ReplyDeleteவாழ்வாங்கு வாழ்ந்தீர் நீர்
ReplyDeleteவல்லோன் அழைத்தான் உனை
வடிவாக தக்வாவொடு பணிசெய்தற்காய்
வடிவாம் சுவனம் ஈந்திட உமக்கு!
வாடிடும் குடும்பம் என்றாலும்
வடித்திட்ட குழந்தைகளு முயர்ந்து
வடிவொடு உம்வழி சென்றிட
உமக்கும் பிர்தௌஸ் கிடைத்திட
உயர்ந்தோனிடம் இரந்தேன்துஆ!
-கலைமகன் பைரூஸ்
May Allah be pleased with him and grand him Jannathul Firdous.
ReplyDeleteyalla Dr um Dr welymaddum parpparhal.ewar yallawahielum yallarukkum uthawyyay erunthar.oddamavadil nallathu keddathu yallathukkum samuham alippar.mihaum satharanamaha yallorudanum palahuwar. ewarukkum jannathul pirthose kidaykka yallam walla allah arul puriwanaha.aameen
ReplyDeleteஅஸ்ஸலாமூ அலைக்கும் எனது ஊரின் முதல் டாக்டர் என்ற பெருமையை பெற்ற இவர் எனது தந்தையின் உயிர் நண்பரும் ஆவார் என்தந்தையின் உயிர் நண்பர் இரந்துவிட்டார் என்பதை கேள்விப்பட்ட எனது தந்தை ஜலீல் மவ்லவி சற்று அதிர்ந்தார் பின்னர் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்ரார் அவரால் நம்பமுடியவில்லை என்ராலும் புறப்ட்டு உடனே சென்றுவிட்டார் அங்கு போய் பார்த்தால் உண்மைதான் என்றுமே அழாத என் தந்தை அன்று அழுதார் காரணம் என்னதான் டாக்டராக இருந்தாளும் எனது ஊருக்கு வந்தால் எப்டியும் எனது தந்தையுன் கதைத்து விட்டுதான் போவார் அப்படிப்பட்ட ஒருவைத்தியரை மட்டுமல்ல நண்பரையும் இழந்த சோகம்தான் காரணம்.
ReplyDeleteஎனது வாழ்வில் இவரைப் போன்ற டாக்டரை நான் பார்த்தில்லை தங்குவதற்க்கு சொந்த வீடு இருந்ததாக தெரியவில்லை ஆனால் கெகுணகொல்லை இர்பானியா மத்ரஸாமாணவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்தது எனக்கு ஞாபகம் உள்ளது
இப்படிப்ட்ட ஒரு மனிதரை இழந்த கெகுணகொல்லை கிராமம் இன்னும் அழுது கொண்டுதான் உள்ளது இவரை போன்ற ஈடுசெய்ய முடியாத ஒரு செல்வத்தை இழந்த எனது ஊர் இன்னும் சோகத்தில் உள்ளது. யாஅல்லாஹ் எங்கள் ஊரில் இருந்த சிறப்பான வைத்தியரை இழந்து விட்டோம் எனது ஊர் இன்னும் சோகத்தில் உள்ளது யாஅல்லாஹ் அவருக்கு சுவனத்திலே உயர்ந்த சுவனம் ஜன்னதுல் பிர்தௌவ்ஸ் எனும் சவனத்தை வழங்குவாயாக இவரது குழந்தைகளையும் இவரைப்போன்ற உயர்ந்த என்னம் படைத்த வைத்தியர்களாக ஆக்குவாயாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
This comment has been removed by the author.
ReplyDelete