மாத்தளையில் நிலம் கீழ் இறங்கியது..!
(ஜே.எம்.ஹபீஸ்)
மாத்தளை பலாபத்வலை என்ற இடத்தில் ஏ-9 பிரதான வீதிக்கருகில் நிலம் கீழ் இறங்கிக் காணப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று 25-01-2013 காலை ஏற்பட்ட இந்த நிலக் கீழ் இறக்கம் காரணமாக 15 அடி ஆழம் 12 அடி விட்டமும் கொண்ட ஒரு பாரிய குழி ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
நேற்று முதல் பெய்து வரும் கடும் மழை மற்றும் சீறற்ற கால நிலை காரணமாக இப்பகுதியில் மேலும் அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment