பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு ஆபத்தா..?
பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களுக்கு அந்நாட்டு ராணுவத்தினால் ஆபத்து உள்ளது. வெளிநாட்டு சக்திகளால் இல்லை என்று பாகிஸ்தான் அணு விஞ்ஞானி பர்வேஸ் ஹூட்பாய் தனது புத்தகத்தில் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி பர்வேஸ் ஹூட்பாய். இவர், கான்ஃபிரான்டிங் தி பாம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளார்.
அதில் கூறியுள்ள விவரங்கள்:
பாகிஸ்தான் ராணுவத்தினராலேயே அங்குள்ள அணு ஆயுதங்களுக்கு ஆபத்து உள்ளது. அந்த ஆயுதங்களை அவர்கள் கைப்பற்றும் நிலைமை ஏற்படலாம். பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள சிலர் வெளியில் உள்ள தீவிரவாதிகளுடன் கைகோர்த்து அணு ஆயுதங்களை கைப்பற்ற திட்டமிடலாம்.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி பாகிஸ்தான் ராணுவ தளபதியாகவும் ஆட்சியாளராகவும் இருந்த பர்வேஸ் முஷாரப், அணு ஆயதங்களை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவற்றை இயக்கும் அதிகாரத்தையும் தன்னிடமே வைத்திருந்தார். எனவே, அணு ஆயுதங்கள் விஷயத்தில் பாகிஸ்தான் அரசு எந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும், அவற்றை இயக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது மிக முக்கியம். மேலும், அவருடைய மனநிலை, உள்நோக்கம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனினும், அணு ஆயுதங்களை யாரும் எளிதில் பயன்படுத்த முடியாமல் தடுத்தல், விபத்து ஏற்படாமல் பாதுகாத்தல் போன்றவை தொடர்பாக அமெரிக்கா அளித்துள்ள தொழில்நுட்பம் பாகிஸ்தானிடம் உள்ளது. பாகிஸ்தானில் 2 ராணுவம் உள்ளது. ஒன்று தளபதி பர்வேஸ் அஷ்ரப் கயானி தலைமையில் இயங்கி வருவது. மற்றொன்று மதத்தின் பெயரால் இயங்கி வருகிறது.
இவ்வாறு பர்வேஸ் ஹூட்பாய் கூறினார்.
Post a Comment