இலங்கைக்கு இராஜதந்திர வெற்றி - கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் அவுஸ்திரேலியா..!
இந்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை காரணம் காட்டி இந்த மாநாட்டை புறக்கணிக்கவிருப்பதாக கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவும் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. எனினும் அவுஸ்திரேலியா இந்த மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இதேவேளை பிரித்தானிய பிரதமரும் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment