Header Ads



குருநாகலில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடல்


(இ. அம்மார்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு இன்று குருநாகல் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் குருநகால் நகரை அண்மித்த பிரதேசங்களிலான தெலியா கொன்ன, மல்லவப்பிட்டிய ஆகிய பகுதிகளில் முஸ்லிம் வியாபார நிலையங்கள்  மூடப்பட்டிருந்தது.

அண்மைக்காலமாக முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்டு வரும் இனவாத அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்களின் ஒற்றுமை இன்றியமையாத ஒரு சேவையாக கருதப்படும் இந்தச் சந்தப்பத்தில் குருநாகல் பசார் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் தெலியாகொன்ன, மல்லவப்பிட்டிய பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளும் குருநாகல் முஸ்லிம் இளைஞர் அமைப்பும் குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ. சு. கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான அப்துல் சத்தார் ஆகியோர் இணைந்து இதற்கான வேண்டுதலை விடுத்திருந்தனர்.

முஸ்லிம்களின் இந்த நிகழ்வுக்கு ஆதராவாக சில சிங்கள தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களின் கடைகளும் இன்று மூடுப்பட்டு இருந்தன. எனினும் முஸ்லிம் நிறுவனங்களான நோலிமிட் பெசன்பக். ஹமீடியா போன்ற வர்த்தக நிலையங்கள் மூடப்படாமை இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. otrumai enum kaitrai patrippidikka muslimkalaal mudium ena eduththukkaatti ivvaaraana samuuha otrumaiyaippenuwomaha "aamin"

    ReplyDelete

Powered by Blogger.